மோகனூர்: மோகனூர் வட்டாரத்தில் உள்ள, 25 கிராம பஞ்சாயத்துகளில், விவசாயிகள் பயனடையுமாறு, தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை இயக்குனர், உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை துவங்குவதற்கான பணியை மேற்கொள்ள தீவிரப்படுத்தி உள்ளார். அதன்படி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும், 10 முன்னோடி விவசாயிகளை ஒருங்கிணைத்து, தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மானியம், தொழில் நுட்பம் மற்றும் பயிற்சி. பண்ணைப்பள்ளி, நேரடியாக விவசாயிகளின் வயல்களை ஆய்வு செய்து, பயிர் பாதுகாப்பு, பராமரிப்பு, தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்க வேண்டும். வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை கொண்டு, விவசாயிகள் பயன் பெறும்படி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், வட்டார அளவில், தோட்டக்கலை உதவி இயக்குனர், தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானி, தோட்டக்கலை அலுவலர் மூலம், வட்டார தோட்டக்கலை விரிவாக்க குழு அமைக்கப்பட்டு, விவசாயிகள் பயனடைவதற்கு, 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்' என்ற செயலி ஏற்படுத்தப்பட்டு, களப்பணியாளர்கள் பணியாற்றுவதற்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குனரை, 94430 25428 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தோட்டக்கலை உதவி இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE