பொது செய்தி

தமிழ்நாடு

புயல் முன்னெச்சரிக்கை: தயார் நிலையில் தீயணைப்பு துறை

Added : நவ 25, 2020
Share
Advertisement
நாமக்கல்: நிவர் புயல் பாதிப்பு ஏற்பட்டால் பேரிடரை தடுக்க, தயார் நிலையில், நாமக்கல் தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளனர். வரும், 27 வரை, நிவர் புயல் வீசுவதால் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு மழை பாதிப்பு இல்லை என்றபோதிலும் பல்வேறு துறையினர் முன்னெச்சரிக்கையாக இடர் அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல்: நிவர் புயல் பாதிப்பு ஏற்பட்டால் பேரிடரை தடுக்க, தயார் நிலையில், நாமக்கல் தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளனர். வரும், 27 வரை, நிவர் புயல் வீசுவதால் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு மழை பாதிப்பு இல்லை என்றபோதிலும் பல்வேறு துறையினர் முன்னெச்சரிக்கையாக இடர் அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் நாமக்கல் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில், நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையிலான குழுவினர் பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றை எதிர்கொள்ள தீயணைப்பு நிலையத்தில் வீரர்கள், சிறப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், அது குறித்து, 101 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, தீயணைப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X