புதுச்சத்திரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம், புதுச்சத்திரம் வட்டார வள மையம் சார்பில், 6-14 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், இடம் பெயர்ந்த குழந்தைகள் மற்றும் 0-18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) ரவிச்சந்திரன் தலைமையில், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். வட்டாரத்துக்கு உட்பட்ட, 21 பஞ்சாயத்துகளில் உள்ள, 177 குடியிருப்புகளில், கள ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள, 6-14 வயது வரை உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள். இடைநின்ற குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பற்றிய விபரங்களை, அருகில் உள்ள பள்ளிகளில் அல்லது வட்டார வள மையத்தில் (தொலைபேசி எண் - 04286 243345) தகவல் தெரிவிக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE