நாமக்கல்: மத்திய, மாநில அரசின் மூலம், ஓய்வூதியம் பெறுபவர்கள், ஒவ்வொரு ஆண்டும், வங்கி, ஓய்வூதியத்துறை அலுவலகம் அல்லது ஓய்வூதியம் வழங்கல் நிறுவனத்திற்கு, நேரில் சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை. நேரில், உயிர் சான்று தருவதற்கு பதில், மின்னனு உயிர்சான்று, இணைய தளத்தின் மூலமாக, 'Jeevan Pramaan' மென்பொருள் மூலம் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை மென்பொருள் மூலமாக, ஓய்வூதியதாரரின் வீட்டு முகவரிக்கே சென்று பெற்று, உரிய ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசு அல்லது வேறு எந்த அரசு அமைப்பின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் இச்சேவையின் மூலம் பயன்பெறலாம். இச்சேவையை பெறுவதற்கு, ஓய்வூதியம் பெறுபவர்கள், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை, தபால்காரரிடம் வழங்கினால், டிஜிட்டல் லைப் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே இலவசமாக உயிர்ச்சான்று, ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கலாம். நாமக்கல் மாவட்டதை சேர்ந்த ராணுவ ஓய்வூதியம், ராணுவ குடும்ப ஓய்வூதியம், ராணுவ சார்ந்தோர் ஓய்வூதியம் பெறுவோர், பயோமெட்ரிக் மூலம் இயங்கும் டிஜிட்டல் சேவையின் மூலம் பயன்பெறுலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE