பொது செய்தி

தமிழ்நாடு

கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Added : நவ 25, 2020
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கல்வி மாவட்டத்தில் கல்வித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கியது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் உத்தரவின்பேரில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

நாமக்கல்: நாமக்கல் கல்வி மாவட்டத்தில் கல்வித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கியது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் உத்தரவின்பேரில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அந்த வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்த முகாமை, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் கபீர் முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர்கள் முருகேசன், சிதம்பரநாதன், ஓய்வு பெற்ற நேர்முக உதவியாளர் தங்கவேலு ஆகியோர் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி முகாமானது நேற்று துவங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதில், நீதிமன்ற வழக்கு, ஊதியம், சரண்டர் பதிவு செய்தல், அலுவலக நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பயிற்சி முகாமில் வழங்கப்பட்டன. 2013ம் ஆண்டுக்கு பின், 2020ல் கல்வித் துறை ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட, 107 ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X