நாமக்கல்: கடை உரிமையாளர்களுக்கு நிர்வாகம் குறித்த இலவச பயிற்சி முகாம், டிச., 1ல் நாமக்கல்லில் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், கடை உரிமையாளர்கள், பணியாளர்களுக்கான நிர்வாகம் குறித்த பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கிறது. வரும், 1ல் துவங்கி, ஆறு வேலை நாட்களுக்கு நடக்கிறது. பயிற்சிக்கு, 35 பேர் மட்டுமே தேர்ந்தேடுக்கப்பட உள்ளனர். குறைந்த பட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி. 18 - 45 வயதுக்குள் இருக்கவேண்டும், நவ., 25க்குள் (இன்று) விண்ணப்பங்களை, இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 3/151, ரவின்பிளாசா, திருச்சி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகில், நாமக்கல் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 04286 221004, 96989 96424, 8825908170 என்ற எண்களிம் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE