நாமக்கல்: தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், 2,230 பயனாளிகளுக்கு, 11.78 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. நாமக்கல் - மோகனூர் சாலை, தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் விரிவாக்கப்பட்ட புதிய வட்டார அலுவலகத்தை இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் பட்டாச்சார்யா திறந்து வைத்தார். தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில் கடன் உதவி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு வங்கியின் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். வங்கியின் பொது மேலாளர் குலோத்துங்கன் வரவேற்றார். இதிலும், செயல் இயக்குனர் பட்டாச்சார்யா பங்கேற்று, 2,230 பயனாளிகளுக்கு சுயஉதவி குழு கடன்களும், தனி நபர்களுக்கான வீடு மற்றும் வாகன கடன்களும் வழங்கினார். மொத்தம், 11 கோடியே, 78 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE