பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

Added : நவ 25, 2020
Share
Advertisement
கரூர்: அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த, 5 முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை, அணைக்கு வினாடிக்கு, 538 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 357 கன அடியாக தண்ணீர் குறைந்தது. ஆறு மற்றும் புதிய

கரூர்: அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த, 5 முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை, அணைக்கு வினாடிக்கு, 538 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 357 கன அடியாக தண்ணீர் குறைந்தது. ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 75.50 அடியாக இருந்தது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணிக்கு நிலவரப்படி, 3,749 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 3,249 கன அடி தண்ணீரும், மூன்று பாசன வாய்க்காலில், 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


* கார்வாழி ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 20 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 19.68 அடியாக இருந்தது. மேலும், கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கடந்த, 24 மணி நேரத்தில் மழை பதிவாக வில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X