கடவூர்: சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள, கடவூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜெயச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: கடவூர் வட்டார பகுதியில், சம்பா நெல் சாகுபடியின் போது ஏற்படும் இயற்கை சீற்றம், இடர்பாடுகளினால் விவசாயிகள் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இதிருந்து காத்து கொள்ளும் வகையில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இதற்கான பிரிமிய தொகை ஏக்கருக்கு, 512 ரூபாய். இதன்மூலம், இழப்பீட்டு தொகை, 34 ஆயிரத்து, 100 ரூபாய் கிடைக்கும். பொது சேவை மையம், கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரிமியத்தை செலுத்தலாம். மீதமுள்ள தொகை மத்திய, மாநில அரசுகள் சார்பில் காப்பீடு நிறுவனத்திற்கு செலுத்தப்படும். சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE