சென்னை: தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 22 அடியை நெருங்குகிறது. கனமழை காரணமாக ஏரிக்கு, நீர்வரத்து 4,027 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 19 மதகுகள் உள்ள நிலையில் 7 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக ஆயிரம் கனஅடி திறக்கப்படும் நிலையில் சூழலை பொறுத்து நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் இந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக அடையாற்றில் கலந்து கடலுக்கு செல்லும். கடைசியாக 2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது திறக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் நேரில் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஏரி பகுதியில் மழை பெய்யும் நிலையில், குடையை பிடித்தபடி ஆய்வு செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE