திருப்பூர் : வாக்காளராக சேர, அதிக மனுக்கள் பெறப்படும்போது, நன்கு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த 21, 22 ஆகிய தேதிகளில், மாநிலம் முழுவதும், வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடந்தன.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகளவு படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இவை பதிவேற்றம் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படும். பல இடங்களில், இரட்டைப்பதிவு கண்டறியப்பட்டுள்ளது. 26ம் தேதிக்குள் (நாளை) தவறான பதிவுகளை நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடி முகவர்களிடம் இருந்து எக்காரணம் கொண்டும் மொத்தமாக படிவங்களை பெறக்கூடாது.
ஒரு ஓட்டுச்சாவடி முகவர், 30 மனு வரை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு மேல், முகவரிடம் இருந்து, கோரிக்கைகள் வரப்பெற்றால், அவற்றை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மீளாய்வு செய்ய, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.வாக்காளர் நீக்கத்தில், இறப்புச்சான்றிதழ் இணைக்கவில்லை என்றாலும், கள அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து, நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE