பொது செய்தி

தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி: சில சுவாரஸ்ய தகவல்கள்

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (நவ.,25) மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிக பெரியது. 9 கிலோமீட்டர் சுற்றளவும், 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில்
செம்பரம்பாக்கம், தகவல்கள், சென்னை

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (நவ.,25) மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிக பெரியது. 9 கிலோமீட்டர் சுற்றளவும், 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில் கலக்கும். இந்த ஏரி 500 ஆண்டுகள் பழமையானது. ஏரி வெட்டப்பட்ட போது, நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 22 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர், தெலுங்கு கங்கைத் திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் நீரைத் தேக்கி வைப்பதற்காக நீர்மட்டம் 24 அடியாக உயர்த்தப்பட்டது.


latest tamil newsஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 ஆயிரம் அடி நீளத்தில் தானாகவே உபரிநீர் வெளியேறும் கலங்கல் ஆகியவற்றைக் கொண்டது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் விநாடிக்கு 50,000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உண்டு. அடையாறு ஆற்றுக்கு நீர் வந்து சேரும் பல நீர்நிலைகளின் மொத்த பரப்பளவு 808 சதுர கி.மீ ஆகும். இவற்றில், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு மட்டும் 358 சதுர கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு ஆண்டுதோறும் குடிநீர் தந்து உதவும் செம்பரம்பாக்கம் ஏரி, நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் மக்களை மிரட்டத் தொடங்கி விடும். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் கனமழை கொட்டியதால், பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விடுவதில் குழப்பமும் கால தாமதமும் ஏற்பட்டது.


latest tamil news


ஒரு கட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திடீரென்று, 30,000 கன அடி நீர் வீதம் அடையாற்றில் திறந்து விடப்பட்டதால், சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது, செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் இன்று திறந்து விடப்பட்டுள்ளது. விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த முறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
25-நவ-202019:19:03 IST Report Abuse
spr கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி சென்னையில் ஏரி, குளம் என 474 நீர் நிலைகள் இருந்துள்ளன.கடந்த 2013ஆம் ஆண்டு அதுவே 43 ஆக குறைந்துள்ளது. தற்போது அதிலும் 96 சதவீத நீர்நிலைகளை காணவில்லை அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என விகடன் (27-11-2015)குறிப்பிடுகிறது இப்பொழுது இன்னும் எத்தனை காணாமற் போனதோ அதில் தெரிந்தே அரசால் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது நுங்கம்பாக்கம் ஏரி,(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்), வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்),விருகம்பாக்கம் ஏரி(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்),அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்) கழகக் கண்மணிகள் மற்றும் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்தது பிற இந்த நிலையில் மழை நீர் வெளியேற அமைக்கப்பட்ட கால்வாய்களின் மீதான ஆக்கிரமிப்பு, மற்றும் பாதாள சாக்கடைகள் கொள்ளையடிப்பதற்காகவே அமைக்கப்பட்டதால் அதன் மூலமும் நீர் வெளியேற வாய்ப்பின்றி இன்று நாம் அவதிப்படுகின்றோம் குறைந்த பட்சம் பாதாளச் சாக்கடைகள், மற்றும் மழைநீர் வடிகால்களை முறையாகப் பராமரிக்காத அரசு அமைச்சர்கள், அரசு அதிகாரிகளையாவது அந்த கொரோனாதான் தண்டிக்க வேண்டும்
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
25-நவ-202017:49:56 IST Report Abuse
Elango தூர்வாரியதாக சொன்னார்கள், இன்று பார்த்தல் நிறைய ஆகாய தாமரை படர்ந்து காணப்படுகிறது. இன்னும் கொள்ளளவை அதிகரிக்க செய்ய முயற்சி செய்யலாம். எப்போதாவது தான் நிரம்புகிறது
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
25-நவ-202016:01:19 IST Report Abuse
sankar மாற்று அரசியல் வந்தால் இதைவிட எல்லா விஷயத்திலும் நன்றாகவே செய்வார்கள்
Rate this:
Sridharan Venkatraman - Chennai,இந்தியா
25-நவ-202018:50:19 IST Report Abuse
Sridharan Venkatramanஇன்பநிதி ஆடசியில்...?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X