பொது செய்தி

தமிழ்நாடு

தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் நாளையும் ரத்து

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்த தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து ரயில்களும் இரு மார்க்கங்களிலும் இன்று (நவ.,25) ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நாளையும் (நவ.,26) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.'நிவர் புயல்' காரணமாக சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் இரு மார்க்கங்களிலும் இன்று (நவ.,25) ரத்து
NivarCyclone, Chennai, Railway, Train, Cancelled, SouthernRailway, நிவர் புயல், ரயில்கள், ரத்து, தெற்கு ரயில்வே

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்த தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து ரயில்களும் இரு மார்க்கங்களிலும் இன்று (நவ.,25) ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நாளையும் (நவ.,26) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

'நிவர் புயல்' காரணமாக சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் இரு மார்க்கங்களிலும் இன்று (நவ.,25) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறவுள்ள நிலையில், நாளையும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


latest tamil news


சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 27 எக்ஸ்பிரஸ் ரயில்களும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தொகை திருப்பி செலுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


விமானங்கள் ரத்து

நிவர் புயல் எதிரொலியாக, சென்னையில் இருந்து கிளம்பும், மற்றும் சென்னை வர வேண்டிய 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
25-நவ-202021:47:49 IST Report Abuse
Loganathan Kuttuva புயலுக்கு பின் பாதிக்கப்பட்ட ரயில் பாதைகளை சீரமைத்து பின் ரயில் சேவை தொடங்கலாம்.
Rate this:
Cancel
arjunan - chennai,இந்தியா
25-நவ-202016:31:21 IST Report Abuse
arjunan சென்னையில் பள்ளமான அந்தந்த பகுதிகளில் நிக்கும் தண்ணீரை தவிர மக்களுக்கு பெரிய பாதிக்கின்ற அளவில் தண்ணீர் இல்லை மீடியாக்கள் காட்டும் அளவிற்கு பயப்பட ஒன்றும் இல்லை அடையாறில் கால்வாசிக்குக்கூட தண்ணீர் ச்செல்லவில்லை நிவர் புயல் பாதிப்பில்லாதவரை பயப்பட ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-நவ-202013:53:18 IST Report Abuse
Ramesh Sargam தெற்கு ரயில்வேயின் சரியான முடிவு. நாளை, ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் ஆனால், முதலில் சிக்குவது தெற்கு ரயில்வே அதிகாரிகளே. அதற்கு இடம் கொடுக்க கூடாது. மேலும், மக்களின் பாதுகாப்பு மிக முக்கியம். மக்களே தங்களின் பாதுகாப்பை நினைவில் கொண்டு இந்தநேரத்தில் பயணம் தவிர்ப்பது சிறந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X