அதிகாரிகள் அந்தந்த பகுதியிலேயே தங்க வேண்டும் : அமைச்சர் சம்பத் உத்தரவு| Dinamalar

அதிகாரிகள் அந்தந்த பகுதியிலேயே தங்க வேண்டும் : அமைச்சர் சம்பத் உத்தரவு

Added : நவ 25, 2020
Share
கடலுார் : புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாரிகள் அந்தந்த பகுதியிலேயே தங்கியிருக்க வேண்டும் என, அமைச்சர் சம்பத் உத்தரவிட்டார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சம்பத் ஆலோசனை நடத்தினார். வேளாண் துறை முதன்மை செயலரும் கடலுார் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி
 அதிகாரிகள் அந்தந்த பகுதியிலேயே தங்க வேண்டும் : அமைச்சர் சம்பத் உத்தரவு



கடலுார் : புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாரிகள் அந்தந்த பகுதியிலேயே தங்கியிருக்க வேண்டும் என, அமைச்சர் சம்பத் உத்தரவிட்டார்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சம்பத் ஆலோசனை நடத்தினார். வேளாண் துறை முதன்மை செயலரும் கடலுார் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜன், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சம்பத் கூறியது:
மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை முன்னேற்பாடு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. 278 பகுதிகள் பாதிப்பு பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 60 ஆயிரம் பேர் தங்கும் வகையில், 250 தங்குமிடங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு பகுதியாக கணிக்கப்பட்டுள்ள பகுதி மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, உணவு வழங்க தேவையான பொருட்களை தயாராக வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.முதல் தகவல் அளிப்பவர்கள், கால்நடை பாதுகாப்பு மையம், பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் வீரர்கள், ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் உள்ளது
தாழ்வான பகுதிகளில் நீர் தேங்காமல் வெளியேற்ற, பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.நோய்த் தொற்று பரவாமல் இருக்க சுகாதார நடவடிக்கை அவசியம் மேற்கொள்ள வேண்டும். பெரிய ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணி, தீயணைப்பு போன்ற துறைகளின் மூலம் பேரிடர் மீட்பு பணிகளுக்கு தேவையான எரிபொருளுடன் ஜே.சி.பி. மற்றும் லாரி, மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்கள் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
வெளி மாவட்டத்திலிருந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் ஊழியர்கள் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் தயாராக உள்ளனர். அந்தந்த பகுதிகளில் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் முழுமையாக சரிசெய்து இயல்பு நிலை திரும்புவேரை அந்த பகுதிகளிலேயே அலுவலர்கள் முகாமிட்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சம்பத் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X