திருநெல்வேலி: தூத்துக்குடி கடலோர பகுதியில் இன்று(நவ.,25) பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையினர் தூத்துக்குடி அருகே, இந்திய - இலங்கை கடலோர எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய எல்லையில் படகு ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த படகை சோதனை செய்தனர். அதில், படகில் இருந்து 30 டன் ஹெராயின், கிறிஸ்டல் மேத்தலின் போதை பொருள், 10 துப்பாக்கிகள் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்பட்ட நிலையில் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி- பந்தலூர் அருகே புஞ்சைவயல் பகுதியில் போக்சோ வழக்கில் தொடர்புடைய சிறுமிக்கு பிறந்த குழந்தை இறந்தது. இக்குழுந்தையை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அடக்கம் செய்தனர். தகவலறிந்த அதிகாரிகள் இன்று குழந்தையின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்ததுடன், இடது கால் டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்திய நிலவரம்
01.ரூ.6 கோடி மதிப்பிலான ஒரு கிலோ ஹெராயின் கோகைன் போதைப்பொருளை கடத்தி வந்த பெண் ஒருவரை மும்பை விமான நிலையத்தில், வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
உலக நிலவரம்
01. ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கலின் அலுவலக வாயில் மீது கார் மோதியது. அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார், டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE