பொது செய்தி

தமிழ்நாடு

1,516 நிவாரண முகாம்களில் 1.33 லட்சம் பேர் தங்க வைப்பு: உதயகுமார்

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னையில் 1.33 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், நிவர் புயல் காற்றின் வேகத்தில் 286 செல்போன் டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அனைத்து பகுதிகளிலும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படாமல்இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னையில் 1.33 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், நிவர் புயல் காற்றின் வேகத்தில் 286 செல்போன் டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.



latest tamil news


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அனைத்து பகுதிகளிலும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படாமல்இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிவர் புயலால் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து 1.33 லட்சம் மக்கள் 1,516 நிவாரண முகாம்களில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் புயல் சூழ்நிலையை கண்காணித்து வருகின்றனர்.


latest tamil news



இந்திய கப்பல் படையை சேர்ந்த இரண்டு கப்பல்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தயார் நிலையில் உள்ளது. புயல் கரையை கடந்து விட்டது என அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. சிவராத்திரி அன்று மக்கள் கவனத்துடன் இருப்பதை போல் இன்று மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202004:52:12 IST Report Abuse
Mani . V சரி இதை வைத்து எவ்வளவு கொள்ளை? அதை சொல்லுங்கப்பு.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-நவ-202000:38:56 IST Report Abuse
தமிழவேல் இவருக்கு வேற உதாரணம் கிடைக்கலையா """சிவராத்திரி அன்று மக்கள் கவனத்துடன் இருப்பதை போல்................................""
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X