மாநிலங்களில் ஊரடங்குக்கு முன் அனுமதி: மத்திய உள்துறை உத்தரவு

Updated : நவ 27, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, இரவு நேர கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். அதே நேரத்தில், முழு ஊரடங்கு அமல்படுத்த, மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு தொடர்பாக, டிச., 1 முதல் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து, அனைத்து
ஊரடங்குக்கு முன் அனுமதி: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை உத்தரவு

புதுடில்லி:'கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, இரவு நேர கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். அதே நேரத்தில், முழு ஊரடங்கு அமல்படுத்த, மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு தொடர்பாக, டிச., 1 முதல் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால், நாடு முழுதும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.
அதே நேரத்தில், பண்டிகை காலம், குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில், சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்து உள்ளது.இதையடுத்து, வரும், டிச., 1 முதல், 31ம் தேதிவரை கண்காணிப்பு, கட்டுப்பாட்டு மற்றும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வைரஸ் பரவலைத் தடுக்க, இரவு நேர கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். அதே நேரத்தில், கட்டுப்பாடு பகுதியைத் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-நவ-202011:56:28 IST Report Abuse
ஆப்பு மாநில முதல்வர்கள் ...க்கு போறதுக்குக் கூட மத்திய அரசு அனுமதி பெறவேண்டும். சட்டம் வரப்போகுது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-நவ-202009:50:54 IST Report Abuse
RajanRajan எங்கேயடா மாநில உரிமைகள் பறிக்க படுகின்றன என கூவுற கூட்டத்தை இன்னும் காணோமா. அண்ணா அவுங்கெல்லாம் இப்போ அவிங்க கோபால புரத்து வுட்டுலே தண்ணி இறச்சு ஊத்திகினு இருக்கானுங்க .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X