நவ., 26, 1923
கர்நாடக மாநிலம், மைசூரில், 1923 நவ., 26ம் தேதி பிறந்தவர், வெங்கடராம பண்டிட் கிருஷ்ணமூர்த்தி என்ற, வி.கே.மூர்த்தி. பெங்களூரில் உள்ள, ஸ்ரீ ஜெயச்சாமராஜேந்திரா தொழிற்நுட்பப் பயிலகத்தில், ஒளிப்பதிவில் பட்டயப் படிப்பு முடித்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றார்.மும்பை சென்று, ஜால் என்ற ஹிந்தி படத்தின் மூலம், ஒளிப்பதிவாளரானார். இயக்குனர் குரு தத்துடன் இணைந்து, பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான, காகஸ் கி பூல் படத்திற்கு, இவர் தான் ஒளிப்பதிவாளர். இந்திய திரைப்பட அகாடமியின், வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ளார். 2014 ஏப்., 7ம் தேதி, தன், 91வது வயதில் காலமானார்.
ஒளிப்பதிவாளர் வி.கே.மூர்த்தி பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE