பொள்ளாச்சி : பொள்ளாச்சி சட்டசபை தொகுதியை சேர்ந்த முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, அம்மா திருமண மண்டபத்தில் நடந்தது.
சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார்.தாசில்தார் தணிகைவேல் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சசிரேகா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.விழாவில், 192 பேருக்கும், நெகமத்தில், 24 பேர் என மொத்தம், 216 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. முதியோர் உதவித்தொகை வழங்கி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''தகுதியானவர்களுக்கு, முதியோர் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி தொகுதியில் தகுதி வாய்ந்தவர்கள் கண்டறியப்பட்டு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE