கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கான அரசு எனில் 'டாஸ்மாக்கை' மூடலாமே

Updated : நவ 27, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
மதுரை:'இது மக்களுக்கான அரசு என்கிறீர்கள். மக்கள் ஆட்சேபம் தெரிவித்தால் 'டாஸ்மாக்கை' மூட வேண்டியதுதானே' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து வெளியிட்டது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பி.மேட்டுப்பட்டியை சேர்ந்த, கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மேட்டுப்பட்டியில் டாஸ்மாக் கடையை அரசு துவக்கியது. அருகே அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை, அரசுப் பள்ளி,
மக்கள் அரசு எனில் 'டாஸ்மாக்கை' மூடலாமே

மதுரை:'இது மக்களுக்கான அரசு என்கிறீர்கள். மக்கள் ஆட்சேபம் தெரிவித்தால் 'டாஸ்மாக்கை' மூட வேண்டியதுதானே' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து வெளியிட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பி.மேட்டுப்பட்டியை சேர்ந்த, கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

மேட்டுப்பட்டியில் டாஸ்மாக் கடையை அரசு துவக்கியது. அருகே அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை, அரசுப் பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. கடை திறப்பதற்கு எதிராக மேட்டுப்பட்டி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அரசிடம் வலியுறுத்தினோம். இதை மீறி கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிராக மக்கள் போராடினர். கடையை மூடக்கோரி மதுரை கலெக்டர், டாஸ்மாக் மேலாளருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, 'மக்களுக்காக நான், இது மக்களுக்கான அரசு என்கிறீர்கள். மக்கள் ஆட்சேபம் தெரிவித்தால் டாஸ்மாக்கை மூட வேண்டியதுதானே. அப்போது மக்கள் வரவேற்பர்' என்றனர்.அரசுத் தரப்பு, 'இக்கடை வேறு இடத்தில் இருந்தது. அது மேட்டுப்பட்டிக்கு மாற்றப்பட்டது. மக்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் கடை மூடப்பட்டது,' என தெரிவித்தது.

நீதிபதிகள், 'இவ்வழக்கில் தற்போதைய நிலை குறித்து கூடுதல் விபரம் பெற்று அரசுத் தரப்பில் அடுத்தவாரம் தெரிவிக்க வேண்டும். டாஸ்மாக் தொடர்பான இதர வழக்குகளுடன் சேர்த்து இவ்வழக்கும் விசாரிக்கப்படும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
26-நவ-202019:56:47 IST Report Abuse
தத்வமசி டாஸ்மாக்கை மூடும் முன் அதற்கு சப்பளை செய்யும் திம்காவின் அனைத்து ஆலைகளையும் இழுத்து மூட உத்தரவிடுங்கள். உங்களால் ஆலைகளை மூட முடியும் என்றால் குடிக்கு ஒரு வழி கிடைக்கும். நாட்டுக்கு தேவையான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையே மூடியாச்சு.... இந்த குடி ஆலைகளை மூட உங்களுக்கு முடியாமா என்று முயன்று பாருங்கள்....
Rate this:
Cancel
பச்சையப்பன்,கோபால் புரம். அன்று லெமூரியா தமிழன் வீட்டிலேயே சோம பானம் சுரா பானம் சுகாதாரமாக சுத்தமாக தயாரித்து ஆனந்தமாக அனுபவித்து வந்தான். மிகுதியாக இருந்ததை ரோம புரிக்கு ஏற்றுமதியும் செய்தான். எங்கள் தள்ளபதி முதல்வரானால் அவர் வலது கையால் டாஸ்மாக் மூட ஒரு கையெழுத்து, இடது கையால் மரத் தமிழன வீட்டிலேயே சோம சுரா பானங்கள் தயாரிக்க ஒரு கையெழத்து போடுவார்கள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-நவ-202017:28:44 IST Report Abuse
தமிழவேல் திமுக சொன்னபடி ஜெயித்து வந்து மூடுவானுவோளா 🤔
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X