பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பரவலாக கனமழை

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யத்துவங்கியது.தமிழகத்தை மிரட்டி வந்த நிரவ் புயல் நேற்று இரவு 10 .40 மணியளவில் புதுச்சேரிக்கு வடக்கே கரை கடக்க துவங்கியது. புயல் கடந்த நேரத்தில் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் 145 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழை கொட்டித்தீர்த்தது.இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிவர் புயல்
சென்னை, சூறைக்காற்று, கனமழை, chennai, heavy rain, wind

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யத்துவங்கியது.

தமிழகத்தை மிரட்டி வந்த நிரவ் புயல் நேற்று இரவு 10 .40 மணியளவில் புதுச்சேரிக்கு வடக்கே கரை கடக்க துவங்கியது. புயல் கடந்த நேரத்தில் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் 145 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிவர் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்யத் துவங்கியுள்ளது. சென்னையில் தாம்பரம், மெரினா பீச், சாந்தோம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, அடையாறு, திருவெல்லிக்கேணி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.


latest tamil news


சென்னைக்கு தெற்கே 100 கி.மீ., தொலைவில் நிவர் புயல் கரை கடக்க துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நகரில் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளதால் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-நவ-202008:24:12 IST Report Abuse
Lion Drsekar ஒரு ஆண்டுக்கு பல லட்சம் கோடி மக்களின் வாழ்வாதாரத்துக்கு, நீர் நிலைகளுக்கும், விவசாயிகளுக்கு தேவையான மழை இரெண்டே நாளில் நிரம்பி வழிகிறது, சென்னை மூழ்கிவிட்டது, கூறினீர் ஏரிகள் வழிகின்றன , பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
26-நவ-202008:23:54 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இயற்கையின் முன் அனைவரும் சமம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X