புதுச்சேரி: புதுச்சேரிக்கு அருகே தீவிரப் புயலாக வலுவிழந்து அதிகாலை 4 மணியளவில் கரைகடந்தது நிவர் புயல். நேற்று இரவு (நவ.25) 11.30 மணியளவில் மணிக்கு 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றோடு புதுச்சேரிக்கு கரை கடக்க துவங்கியது

மணிக்கு 16 கி.மீ., வேகத்தில் நிவர் புயலால் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் கரை கடந்த போது விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.
இந்நிலையில் புயல் முழுவதும் கரை கடக்க தாமதம் ஆகும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து அதிதீவிர நிலையிலிருந்து தீவிரப்புயலாக மாறியதாக சென்னை வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன்அறிவித்தார். இது அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழந்து நிலப்பகுதிக்கு செல்லும். வட தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என மேலும் அறிவித்தார்.

தொடர்ந்து கண்காணிப்பு:அமைச்சர்
மழை புயல் சேத நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்துவருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்து உள்ளார். விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்த விவரங்கள் அறிய குழுக்கள் அமைக்கப்பட்டு முதல்வர் ்பின்னர் அறிவிப்பு வெளியிடுவார், இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்
சென்னையில் 2 நாட்களுக்கு மழை
சென்னையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் எனவும் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், புதுச்சேரி மின்நிறுத்தம்
புயல் கடந்த போது பாதுகாப்பு காரணமாக காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE