பொது செய்தி

இந்தியா

வட இந்தியாவுக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புது டில்லி: தேசிய தலைநகர் உட்பட பல வட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் கடும் குளிர் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது பற்றி மேலும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளதாவது: நவம்பர் 27 முதல் 29 வரை வடமேற்கு இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை வீழ்ச்சியடையக்கூடும். இதனால் பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, வடக்கு ராஜஸ்தான்

புது டில்லி: தேசிய தலைநகர் உட்பட பல வட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் கடும் குளிர் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news


இது பற்றி மேலும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளதாவது: நவம்பர் 27 முதல் 29 வரை வடமேற்கு இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை வீழ்ச்சியடையக்கூடும். இதனால் பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் குளிர் அலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்கு பகுதியில் வானிலை மாற்றம் காணப்படுகிறது. அதன் காரணமாக நவ., 25 முதல் ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்ஜித்-பால்டிஸ்தான், முசாபராபாத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை அல்லது கனமழை இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


latest tamil news


காஷ்மீரில் ஏற்கனவே பனிப்பொழிவு தொடங்கிவிட்டது. ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. வடக்கு காஷ்மீரில் சாலையில் 10 செ.மீ உயரத்திற்கு பனி மூடியிருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளும் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது. பாலைவன மாநிலமான ராஜஸ்தானிலும் குளிர் நிலவுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun kumar - Jubail,சவுதி அரேபியா
26-நவ-202016:10:01 IST Report Abuse
Arun kumar டிசம்பர் 23 முதல் ஜனவரி 14 2021 வரை குளிரால் முழு முடக்கு வரும் வட இந்தியாவில்
Rate this:
Cancel
26-நவ-202007:14:12 IST Report Abuse
ஆப்பு இந்தப் புகைதான் டில்லி பொல்யூஷனுக்கு முக்கிய காரணம்.
Rate this:
Cancel
26-நவ-202007:14:16 IST Report Abuse
ஆப்பு படத்தில் இருக்குற மாதிரி நாலு நாலு பேரா தெருவோரம் தீ மூட்டி பீடாவை குதப்பி துப்பிக்கிட்டிருப்பாய்ங்க. இந்தப் புகைதான் டில்லி பொல்யூஷனுக்கு முக்கிய காரணம்.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
26-நவ-202011:43:01 IST Report Abuse
Chowkidar NandaIndiaநம்மூருல வெள்ளத்துலகூட டாஸ்மாக்கிற்கு நீந்தி போயி வாங்கி டுமிலர்கள் மட்டை ஆவது ஞாபகத்திற்கு வருகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X