சென்னை: நிவர் புயல் புதுச்சேரி அருகே கரை கடந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தை மிரட்டி வந்த நிவர் புயல் தீவிர புயலாக புதுச்சேரி அருகே கரை கடந்தது. அதிதீவிரப் புயலாக கரை கடக்க துவங்கிய புயலானது கரை கடக்கும் நேரத்தில் வலுவிழந்தது. தொடர்ந்து 6 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவிழக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை கொட்டித்தீர்க்கும், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE