சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது
வங்கக்கடலில் உருவாகிய நிவர் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து 22 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி முதலில் விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 5000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு மேலும் 9000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு நீர் திறப்பு 7000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்று காலை முதல் செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் நீர் வரத்து 8,850 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து இன்று காலை முதல் மீண்டும் நீர்திறப்பு 9,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
ஆனால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை குறைந்ததால் ஏரிக்கு நிர்வரத்து குறைந்தது. தற்போது நீர்திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE