அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி!

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (108)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :டி.கலையரசன், திருப்பூரிலிருந்து அனுப்பிய இ - மெயில் கடிதம்:தம்பி உதயநிதி! நீங்க ஒரு கூட்டத்துல பேசிய, மிரட்டல் பேச்சை கேட்டேன். நானும் தி.மு.க.,காரன் தான். பல வருடமா அரசியலில் இருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன், போலீசிடம் ஒட்டவும் கூடாது; உரசவும் கூடாது. அது, உங்களுக்கு தெரியுமான்னு, எனக்கு
உதயநிதி ஸ்டாலின், அரசியல், இது உங்கள் இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


டி.கலையரசன், திருப்பூரிலிருந்து அனுப்பிய இ - மெயில் கடிதம்:
தம்பி உதயநிதி! நீங்க ஒரு கூட்டத்துல பேசிய, மிரட்டல் பேச்சை கேட்டேன். நானும் தி.மு.க.,காரன் தான். பல வருடமா அரசியலில் இருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன், போலீசிடம் ஒட்டவும் கூடாது; உரசவும் கூடாது. அது, உங்களுக்கு தெரியுமான்னு, எனக்கு தெரியல!

நீங்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது, 'இன்னும் நாம் ஆட்சிக்கு வரவில்லை... பார்த்துக் கொள்கிறோம். ஸ்பெஷல் டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ். பேரெல்லாம் நாங்கள் ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் ஐந்து மாதம் தான் இருக்கிறது. எங்களுக்கு தெரியாத காவல் துறையா... நாங்க பார்க்காத காவல் துறையா...' என, மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறீர்கள்.

அடுத்து தி.மு.க., தான் ஆட்சிக்கு வரப்போகிறது. எனவே, போலீஸ் அதிகாரிகள் அஞ்சி நடுங்கி இருக்க வேண்டும் என, கருதுகிறீர்கள் போலிருக்கிறது. ஓய்வு பெறும் வரை பணியில் இருப்பவர்கள், போலீசார். அரசியல்வாதிகளை போல, மாறக் கூடியவர்கள் அல்ல. ஒரு போலீஸ்காரர், எப்போதுமே இன்னொரு போலீஸ்காரரை விட்டுக் கொடுக்க மாட்டார்.

போலீசை, அதுவும் உயர் போலீஸ் அதிகாரியை, கிள்ளுக்கீரையாக எண்ணி மிரட்டல் தொனியில் பேசினால், அதை மற்ற போலீசார் எல்லாம் எப்படி எடுத்துக் கொள்வர்? தன்னையேஅவமானப்படுத்தும் வகையில் பேசியதாகத் தான், ஒவ்வொரு போலீஸ்காரரும் எடுத்துக் கொள்வார்.

ஒரு வேளை தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர முடியாவிட்டால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஏதாவது பிரச்னையில் நீங்கள் மாட்டினால் தெரியும்; போலீஸ்காரர்கள் 'லாடம்' கட்டி விடுவர்! உங்கள் அப்பாவுக்கு, 'மிசா'வில் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? சிட்டிபாபு மட்டும் இல்லாவிட்டால், இன்று தளபதி இருக்க மாட்டார். என்ன அடி கொடுத்தனர்; எதனால் என்று அவருக்குத் தெரியும்!


latest tamil news


அதே போல, 'அய்யய்யோ கொல்றாங்களே...!'என்று உங்கள் தாத்தா நள்ளிரவில் கத்தியது ஞாபகம் இருக்கிறது தானே? போலீஸ்காரர்கள், முன்னாள் முதல்வர் என்று கூட பார்க்க மாட்டார்கள்.

உங்கள் அப்பாவுக்கும், தாத்தாவுக்குமே இப்படி என்றால், உங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் தம்பி!இங்கு சினிமா ஹீரோ போல பேசக்கூடாது. 'பெண்டு' நிமிர்த்தி விடுவர். அரசியலில் மூத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், அப்புறம் உங்கள் இஷ்டம்!


Advertisement
வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
26-நவ-202022:58:28 IST Report Abuse
CHINTHATHIRAI We don't know what happened before the speech. Saathankulam incident brought a bad remarks about all of us. Instead of doing cheap politics better to do something fruitful to mankind. Money alone won't bring happiness and peace. Today Madurai Bench of Madras High court has ordered to both State and Central Government to frame and enact rules regarding Torts. If the government enacted the Act in time then there won't be any unwanted speeches in public. Due to technological developments things has to be modified. Most of the cases police department not complying the court directions and the court also not considering the hardship faced by our police. In fact we are living with peace because of surveilance of our police round the clock. One india. government servants should be posted far away from their kith and kin for effective service. We need a strong government without corruption in any corner.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
26-நவ-202022:36:43 IST Report Abuse
Tamilnesan திரவிஷ ஆட்சியிலே இதெல்லாம் சகஜமப்பா.............கூத்தாடி அரசியல் என்று தமிழ் நாட்டில் ஒழிகிறதோ அன்று தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம்.
Rate this:
Cancel
26-நவ-202019:19:08 IST Report Abuse
மீராபாய் பத்து தலைமுறைக்கு பணம் இருக்கு ... நாளை இவர் மகன் இன்பநிதி போலிஸை வசைபாடினால் கூட ஆச்சர்யபடுவதற்கில்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X