சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அதி தீவிர புயலாக இருந்த 'நிவர்', கரையை கடக்கும் போது தீவிர புயலாக வலுகுறைந்து, அதிகாலை 2:30 மணியளவில் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அடுத்த 3 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வானிலை மையம் கூறியுள்ளதாவது:

நிவர் புயல் தற்போது புதுச்சேரியிலிருந்து 50 கி.மீ வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செ.மீ., சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 27.8 செ.மீ., புதுச்சேரியில் 23.7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கடலூரில் 28.2 செ.மீ., மழை பாதிவாகியுள்ளது. கடலூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 27.8 செ.மீ., வானமாதேவியில் 19.2 செ.மீ., பரங்கிப்பேட்டையில் 18.3 செ.மீ., கொத்தவாச்சேரியில் 14.1 செ.மீ., குறிஞ்சிப்பாடியில் 13.5 செ.மீ., குடிதாங்கியில் 13.1 செ.மீ., பண்ருட்டியில் 10.6 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE