விரைவில் அழுகிவிடும் பழங்களின் ஆயுளை நீட்டிக்க, அவற்றை உலரச் செய்வர். பழங்களிலுள்ள ஈரப் பதத்தை நீக்கினால், அவற்றின் சத்துக்கள் கெடாமல் நெடுநாட்கள் இருக்கும். மிகப் பழைய இந்த தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, வந்திருக்கிறது ஒரு ஹைடெக் யுக்தி. அதுதான் 'அயனிக் காற்று' மூலம் பழங்களை உலர்த்துவது.தற்போது, வெப்பமில்லா காற்றை தொடர்ந்து செலுத்தி, பழங்களை உலர்த்து கின்றனர்.
இதற்கு அதிக மின்சாரம் செலவாகும். அதற்கு பதில், பழங்களை கலனில் இட்டு, ஒரு உயர் மின்னழுத்தக் கம்பியில் நேர்மறை மின் துாண்டலை ஏற்படுத்தினால், காற்றில் உள்ள வாயுக்களின் அணுக்களின் எலக்ட்ரான்கள், அந்த மின் முனையை நோக்கி ஈர்க்கப்படும்.
அதே வேளையில், புரோட்டான்கள் பிரிந்து வேகமாக விலகும். இந்த வினையால் கலனின் அடியில் உள்ள சேமிப்பானை நோக்கி புரோட்டான்கள் பயணிப்பதை, 'அயனிக் காற்று' என்பர்.இந்த தொழில்நுட்பம் பழையது தான். என்றாலும், இதை பழங்களை உலர்த்துவதற்காக, சுவிட்சர்லாந்தின் 'எம்ப்பா' ஆய்வு மையம் மற்றும் கனடாவின் டல்ஹவுசி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதல் முறையாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
அயனிக் காற்றினால், கலனில் உள்ள பழங்கள் ஒரே நேரத்தில், இரட்டிப்பு வேகத்தில் உலர்கின்றன என்பது இனிக்கும் செய்தி தான். விரைவில் இந்த நுட்பம் புழக்கத்திற்கு வந்தால், பழங்கள் விரையமாவது தவிர்க்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE