பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 14,139 ஏரிகளில் இதுவரை 1,697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.வடகிழக்கு பருவமழை, நிவர் புயல் என தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தமிழகம் முழுவதுமுள்ள பல ஏரிகள் நிரம்பியுள்ளன. இது தொடர்பாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள 14,139 ஏரிகள் உள்ள நிலையில் அதில், 1,697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 487 ஏரிகள் 91
தமிழகம், ஏரிகள்

சென்னை: தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 14,139 ஏரிகளில் இதுவரை 1,697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

வடகிழக்கு பருவமழை, நிவர் புயல் என தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தமிழகம் முழுவதுமுள்ள பல ஏரிகள் நிரம்பியுள்ளன. இது தொடர்பாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள 14,139 ஏரிகள் உள்ள நிலையில் அதில், 1,697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 487 ஏரிகள் 91 முதல் 99 சதவீதமும், 876 ஏரிகள் 81 முதல் 90 சதவீதமும், 834 ஏரிகள் 71 முதல் 80 சதவீதமும், 1,481 ஏரிகள் 51 முதல் 70 சதவீதமும் நிரம்பியுள்ளன. 2,073 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 4,919 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளது.


latest tamil news


அதேநேரத்தில், 1,772 ஏரிகளில் நீர் இருப்பே இல்லை. அதிகபட்சமாக 2,040 ஏரிகள் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் 392 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 417 ஏரிகளில் 70ம், சென்னை மாவட்டத்தில் உள்ள 28 ஏரிகளில் 2ம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில் 78ம், மதுரை மாவட்டத்தில் 1,340 ஏரிகளில் 242ம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,131 ஏரிகளில் 36ம், தென்காசி மாவட்டத்தில் 543 ஏரிகளில் 226 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1,460 ஏரிகளில் ஒரு ஏரிகூட முழு கொள்ளளவை எட்டவில்லை. அரியலூர், தருமபுரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் ஒரு ஏரிகூட 100 சதவீதம் நிரம்பவில்லை. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒரு ஏரி மட்டும் 100 சதவீதம் நிரம்பியுள்ளது என்று பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arunachalam, Arunn - Hongkong,சீனா
26-நவ-202016:07:44 IST Report Abuse
Arunachalam, Arunn ஏரிகள் நிரம்பின ????????? பொதுப்பணித்துறை என்றைக்கு இந்த நீர் நிலைகளை தூர்வாரியது???? எத்தனை நீர்நிலைகளை ஆழப்படுத்தியது?????எப்பொழுது ????? எத்தனை நீர்வழி தடங்களை சரி செய்து, குப்பைகளையும் ஆக்கிரமிப்புக்களையும் அப்புறப்படுத்தியதி.??????? எல்லாம் வாய்கிழிய பேசியோ, பல சுற்று மீட்டிங் போட்டோ , செய்வோம் என்று சொல்வதிலோ ஒரு உபயோகமும் இல்லை..... எல்லா மழை காலங்களிலும் இதே பேச்சு, இதே ட்ராமா ......
Rate this:
Cancel
26-நவ-202015:09:23 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) வாய்க்கால்கள் முழுமையாக தூர் வாரப்பட்டு இருந்தால் எல்லா ஏரிகளும் நிரம்பி இருக்கும். கமிஷன் இல்லாமல் எந்த பணிகளும் நடப்பது இல்லை.
Rate this:
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
26-நவ-202014:18:08 IST Report Abuse
Ganesan புண்ணியவான்கள் ஆட்சியில வேற என்ன தான் வேண்டும். எல்லாம் இப்படி தான் நடக்கும்.... வாங்க வாங்க வாங்க மங்கீஷுக்லா உங்களை வரவேற்கிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X