பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் பல இடங்களில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே சுற்றி சுழன்று கோர தாண்டவம் ஆடியது. மணிக்கு 150 கி.மீ.,க்கு மேல் வீசிய சூறாவளி காற்றின் ஆக்ரோஷத்தால், மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. ஏராளமான
சென்னை, மரங்கள், மாநகராட்சி, நிவர், நிவர்புயல், cycloneNivar, nivar,

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் பல இடங்களில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே சுற்றி சுழன்று கோர தாண்டவம் ஆடியது. மணிக்கு 150 கி.மீ.,க்கு மேல் வீசிய சூறாவளி காற்றின் ஆக்ரோஷத்தால், மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. ஏராளமான கட்டட மேற்கூரைகள் காற்றில் பரந்தன. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் துவம்சம் ஆனது. பல மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.


latest tamil news


சூறாவளி காரணமாக சென்னையில் 267 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதில் 233 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 60 மரங்கள் சாய்ந்த நிலையில், பெரும்பாலான மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. அடையாறு மண்டலத்தில் விழுந்த 59 மரங்களில் 48 மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், குறுகலான சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
27-நவ-202006:44:45 IST Report Abuse
Kalyan Singapore மேகத்திரளை மிதமாக்கி மிதமான மழை பொழிய வைக்க மரங்களை நட்டு வெட்டாமலும் கரிமலை வாயு போன்ற கிரீன் ஹவுஸ் எபெக்ட் வாயுக்களை வெளிவிடும் வாகனங்களையோ ஆலைகளையோ ஒட்டாமல் இருந்தால் போதுமானது
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-நவ-202015:46:24 IST Report Abuse
Bhaskaran Antha marangalai appadiya nalla vilaiku marathottiku vithutaangalaa
Rate this:
Cancel
mani - melarasur, Trichy,இந்தியா
26-நவ-202011:59:34 IST Report Abuse
mani நிபர் புயலை முன் எச்சரிக்கையாக துரித நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், அனைத்து ஏர்பாடுகளையும் தானே முன்னின்று செயல்படுத்திய முதலமைச்சர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X