அரசியல் செய்தி

தமிழ்நாடு

புயல் பாதிப்பு: து.முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நேரில் ஆய்வு

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக., தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.நிவர் புயல், தமிழகத்தின் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் அதிகபட்ச பாதிப்பை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
NivarCyclone, Tamilnadu, Puducherry,

சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக., தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

நிவர் புயல், தமிழகத்தின் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் அதிகபட்ச பாதிப்பை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயலால் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்களுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை தரமணி பகுதியில் துணை முதல்வர் பன்னீர்செல்வமும், சைதாப்பேட்டை பகுதியில் திமுக., தலைவர் ஸ்டாலினும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.


latest tamil news



latest tamil news




புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'புதுச்சேரியில் 24 மணிநேரத்தில் 23 செ.மீ., அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இதுபோன்ற மழைப்பொழிவை நாங்கள் பார்த்ததில்லை. உயிரிழப்பு பற்றிய தகவல் இல்லை. மின்சாரப் பிரச்னை 12 மணிநேரத்தில் சரிசெய்யப்படும்,' எனக் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Johor,மலேஷியா
27-நவ-202005:25:40 IST Report Abuse
Siva நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் சத்தம் இல்லாமல் தனது சொந்த காசில் உதவி செய்கிறார்கள் அதை ஒரு ஒப்புக்காவது இங்கு சொல்லியிருக்கலாமே ? என்ன ஒரு பாரபட்சம் ?
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
26-நவ-202015:52:05 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ஆஹ இந்த புயலை தடுத்து நிறுத்தி இலங்கைக்கு திருப்பி அனுப்பாத எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று உயர்மட்டக்குழு சார்பாக நான் ஜப்பான் துணை முதல்வர் கேட்டுக்கொள்கிறேன் ...
Rate this:
26-நவ-202017:57:52 IST Report Abuse
ஆப்புபுயலை இலங்கைக்கு திருப்புவதெல்லாம் மத்திய அரசு விவகாரம்....
Rate this:
Cancel
26-நவ-202014:18:44 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சப்பான் துணை முதல்வர் இன்னமும் துணை முதல்வரா இருப்பதாக எண்ணிவிட்டாரா? ஆக, ஆக, ஆக, ஆக, ஆக, அட்டைக்கத்தியும் கூட ஆய்வு பண்றாராமா? என்ன பதவியில் இருக்காரு புயல் நிவாரணம் வழங்க? பணிகளை முடுக்கி விட? ஓ, தந்தை சேர்த்து வெச்ச பணம் இருக்காமா? அட்றா சக்க அட்றா சக்க அட்றா சக்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X