பொது செய்தி

தமிழ்நாடு

நிவர் புயல்: கடலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலூர்: நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.நிவர் புயல் முதலில் கடலூர் மாவட்டத்தை தாக்கியது. புயல் கரையை நெருங்குவது தொடங்கி கரையை கடந்த பின்னும் விடாமல் மழை கொட்டியது. கடலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.,25) காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி,
கடலூர், மழை, நிவர்புயல்

கடலூர்: நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

நிவர் புயல் முதலில் கடலூர் மாவட்டத்தை தாக்கியது. புயல் கரையை நெருங்குவது தொடங்கி கரையை கடந்த பின்னும் விடாமல் மழை கொட்டியது. கடலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.,25) காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்தது.


latest tamil news


கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சாமியார்பேட்டை உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. விடிய விடிய பெய்த கனமழையால் கடலூரில் 28.2 செ.மீ., மழை பாதிவாகியுள்ளது. கடலூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 27.8 செ.மீ., வானமாதேவியில் 19.2 செ.மீ., பரங்கிப்பேட்டையில் 18.3 செ.மீ., சிதம்பரத்தில் 17.8 செ.மீ., கொத்தவாச்சேரியில் 14.1 செ.மீ., குறிஞ்சிப்பாடியில் 13.5 செ.மீ., குடிதாங்கியில் 13.1 செ.மீ., புவனகிரியில் 12 செ.மீ., விருத்தாசலத்தில் 11 செ.மீ., பண்ருட்டியில் 10.6 செ.மீ., காட்டுமன்னார்கோவிலில் 9.8 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.

இதனால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டனர். சூறாவளி காற்று காரணமாக பல இடங்களில் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-நவ-202020:47:50 IST Report Abuse
Ramesh Sargam புயல் கரையை கடந்தவுடன், மக்கள் அரசு அறிவிப்பை மீறி தங்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து, கடற்கரைக்கு வேடிக்கை பார்க்க கூட்டம் கூடினர். இப்படிப்பட்ட மக்களை என்னவென்று சொல்வது. தங்களுக்கும் புத்தியல்ல. அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளையும் பொருட்படுத்துவதில்லை. ஹூம். பட்டாலும் புரிவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X