முப்பரிமாண அச்சியந்திரங்கள் பல துறைகளில் நுழைந்து புரட்சி செய்து வருகின்றன. கைக்கு அடக்கமான உதிரி பாகங்களை பிளாஸ்டிக் மூலம் உற்பத்தி செய்வது முதல், மருந்து ஆராய்ச்சிக்காக உயிருள்ள மனித தோல் திசுக்களை படலமாக அச்சிட்டு தருவது வரை அவை கில்லாடிகளாகி வருகின்றன.அண்மையில், ஜெர்மனியில் ஒரு வீடு மிக வேகமாக, 'அச்சிடப்பட்டு' வருகிறது.
மூன்று அடுக்கு மாடி குடியிருப்பில், மொத்தம் ஐந்து வீடுகள் இருக்கும். இக்குடியிருப்பு முழுதுமே, 'பெரி' என்ற ஒரு ராட்சத முப்பரிமாண அச்சு இயந்திரத்தின் மூலம் அச்சிடப்பட்டது.
சிறப்பான சிமென்ட் கலவை மற்றும் கடினமான, 'நாசில்' எனப்படும் உலோக முனை மூலம், படலம் படலமாக வார்க்கப்பட்டு, கட்டடம் ஆறு வாரங்களில் கட்டி முடிக்கப்படும் என, 'பெரி'யின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE