மும்பை: பா.ஜ.,வை மஹாராஷ்டிர துரோகிகள் என சிவசேனா விமர்சித்த நிலையில், அதற்கு மாநில பாஜ., தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத், தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி போன்றவர்களுக்கு பாஜ., ஆதரவு அளிப்பது, சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்கின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது போன்ற காரணங்களுக்காக, பா.ஜ.,வை மஹாராஷ்டிர துரோகிகள் என சிவசேனா கூறியது. இது தொடர்பாக மஹா., மாநில பாஜ., தலைவர் தேவேந்திர பட்னாவிஸிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்ததாவது:

யாரோ ஒருவர் கூப்பிடுவதால், யாரும் மஹாராஷ்டிரா துரோகிகள் ஆகிவிடமுடியாது. அவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினால், அவர்கள் அந்த நபரை மஹாராஷ்டிரா துரோகிகள் என கூறுகின்றனர். கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது பா.ஜ., கட்சிதான் மஹா.,வின் அடையாளத்தை காக்க பணியாற்றியது. முதலீட்டை திரட்டுவதில் குஜராத்தை முந்தி, நாங்கள் மஹா.,வை முதல் மாநிலமாக மாற்றினோம். அப்போது முதல்வராக இருந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவா் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE