சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம், ராணிப்பேட்டையில் மழை காரணமாக இருவர் பலி; வாழை மரங்கள் சேதம்

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020
Share
Advertisement
விழுப்புரம்: நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.நிவர் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 17 செ.மீ., மழை பெய்தது. மழை காரணமாக மரக்காணம் வானூர் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மரக்காணம் கிளியனூர் பகுதிகளில் 10 இடங்களில்
விழுப்புரம், கனமழை, ராணிப்பேட்டை, வாழைமரம்

விழுப்புரம்: நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

நிவர் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 17 செ.மீ., மழை பெய்தது. மழை காரணமாக மரக்காணம் வானூர் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மரக்காணம் கிளியனூர் பகுதிகளில் 10 இடங்களில் நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தன. போலீசார் மற்றும் மீட்பு படையினர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கோனூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். பஸ் நிலையம், நகராட்சி மைதான காய்கறி சந்தை, ரயில்வே தரைப்பாலம் ஆகியவை மழை நீரில் மூழ்கின. வாணியம்பாளையம் பகுதியில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் தண்ணீரில் மூழ்கியது. பல இடங்களில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


latest tamil news





ராணிப்பேட்டை



ராணிப்பேட்டையில் கனமழை காரணமாக ஒருவர் உயிரிழந்தார். 9 வீடுகள் மற்றும் வாழை மரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. பலத்த காற்று காரணமாக பஸ் மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X