ஜெயலலிதா நினைவிடத்தை சிறப்பா அமைக்கிறதுல, முதல்வர் பழனிச்சாமி, தனிப்பட்ட முறையில ஆர்வம் காட்டுறாரு... பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரனிடம், நினைவிடம் அமைக்கும் பணியை கொடுத்த முதல்வர், துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று, அங்கிருக்கும் நினைவிடங்களை பார்த்துட்டு வரச் சொல்லியிருக்காரு. நினைவிடத்தின் உள்ளே, ஒரு கண்காட்சியகம் அமைக்கணும்னு அவங்க சொன்னதும், அதையும் செய்ய சொல்லிட்டாரு... கூடவே, நினைவிடத்தை ஐந்தாண்டுகள் வரை தொடர்ச்சியா பரமாரிக்கும் பணியை மேற்கொள்ளவும், உத்தரவு போட்டுள்ளார்...!
தி.மு.க.,வில் திடீர் ‛வாய்ப்பூட்டு'

சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும், 1,500 பிரசார கூட்டங்களை, தி.மு.க., நடத்த உள்ளது. கட்சியின் பிரபலங்கள் பங்கேற்கும் பிரசாரத்துல, ‛ஹிந்து மதத்துக்கு எதிரான கருத்துகளை பேச கூடாது; அவமதிக்கும் செயலில் ஈடுபட கூடாது'ன்னு, கட்சி மேலிடம் சொல்லியிருக்காம்... அதோட, ஹிந்துக்கள் அதிகமுள்ள இடங்கள்ல, தி.மு.க.,வோ, அதன் தலைவர்களோ, ஹிந்து மதத்துக்கு எதிரானவர்கள் இல்லைங்கிறதை, கடந்தகால நிகழ்வை சுட்டிக்காட்டி பேசவும், உத்தரவு போட்டிருக்காங்களாம்...!
அம்பலமாகும் வசூல் பட்டியல்
தி.மு.க.,வுல இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டதும், சில நிபந்தனைகளோட, ஜூலை மாசம் முதல்வர் பழனிச்சாமியை சந்திச்சாரு... அவரோட நிபந்தனைகள்ல, சிலவற்றை ஏற்க முடியாதுன்னு, நேரடியாகவே முதல்வர் சொல்லிட்டாராம்... அதுக்கு அப்புறம் தான், அவர், பா.ஜ.,வுல தன்னை ஐக்கியப்படுத்திக்க முடிவு எடுத்துள்ளார். பா.ஜ.,வில் ஐக்கியமான ராமலிங்கம், தி.மு.க.,வின், ‛ஒன்றிணைவோம் வா' திட்டத்துக்காக, ஸ்டாலின் பெயரைச் சொல்லி, எவ்வளவு வசூல் பண்ணினாங்கற பட்டியலையும், ஆதாரங்களையும் வெளியிடப் போறாராம்...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE