நிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
பீஜிங்: மத்திய ராணுவ ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜிங்பிங், ராணுவ பயிற்சிகள் நிஜ போரை போன்று இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலை தேவை என உத்தரவிட்டுள்ளார்.சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் என்பது 20 லட்சம் வீரர்களை கொண்ட ராணுவத்தின் தலைமை அமைப்பாகும். இதன் தலைவராக அதிபரே உள்ளார். நேற்று (நவ.,25) அவ்வமைப்பின் கூட்டத்தில் ஜி ஜிங்பிங் பங்கேற்றார். உண்மையான போர்
XiJinping, Transforming, ChineseMilitary, WorldClass, Force, சீனா, அதிபர், ஜிங்பிங், ராணுவம், போர் பயிற்சி

பீஜிங்: மத்திய ராணுவ ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜிங்பிங், ராணுவ பயிற்சிகள் நிஜ போரை போன்று இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலை தேவை என உத்தரவிட்டுள்ளார்.

சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் என்பது 20 லட்சம் வீரர்களை கொண்ட ராணுவத்தின் தலைமை அமைப்பாகும். இதன் தலைவராக அதிபரே உள்ளார். நேற்று (நவ.,25) அவ்வமைப்பின் கூட்டத்தில் ஜி ஜிங்பிங் பங்கேற்றார். உண்மையான போர் நிலைமையை மையமாக கொண்டு பயிற்சிகள் அமைக்கப்பட வேண்டும். போர்களை வெல்லும் திறனை அதிகரிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி, தங்கள் நாட்டு ராணுவத்தை 2027-க்குள் அமெரிக்க ராணுவத்துக்கு இணையானதாக மாற்ற திட்டமிட்டுள்ளது. சீனா இந்தியா இடையே கிழக்கு லடாக்கில் கடந்த 6 மாதமாக மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


latest tamil news




மேலும் இந்த கூட்டத்தில் அதிபர் ஜி ஜிங்பிங் பேசியதாவது: புதிய வகை ராணுவ பயிற்சி முறையை விரைவாக செயல்படுத்த வேண்டும். புதிய சகாப்தத்திற்கு ஏற்ப வலுவான ஆயுதப் படைகளை உருவாக்க வேண்டும். அவை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். கட்சியின் இந்த இலக்கிற்கு வலுவான ஒத்துழைப்பு தேவை. ராணுவப் பயிற்சி என்பது ராணுவத்தின் வழக்கமான பணிகளின் மையப்புள்ளி. பயிற்சியே போர் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறை. ராணுவம் தயார் நிலையில் இருப்பதற்கான நேரடி வடிவம் அது.


latest tamil news



எனவே பயிற்சியானது உண்மையான போர் போன்றே இருக்க வேண்டும். அதற்கான சிறந்த செயல்திட்டங்கள், உயர் மட்ட அமைப்புகள் தேவை. நாட்டின் பாதுகாப்பு சூழல், போர் நிலைமை, நவீன போர் முறைகள், பயிற்சி போன்றவற்றில் புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கேற்ப அதிகாரிகள் மற்றும் வீரர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியறிவை உயர்த்த வேண்டும். பயிற்சியில் புதிய ஆயுதங்களை பயன்படுத்த முயற்சியுங்கள். இவ்வாறு பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Modikumar - West Mambalam,இந்தியா
27-நவ-202008:54:57 IST Report Abuse
Modikumar சமீபத்திய ரா உளவு துறை அறிக்கையில் சீனா தென் கிழக்கு ஆசியா வில் ஒரு நாட்டில் ஆழமாக கால் பதித்து அந்த நாட்டை ஹாங்காங் போல் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாம். அது இந்தியாவின் ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான் நிக்கோபாருக்கு அருகே இருக்கும் சிங்கப்பூர் தான் சீனா வின் இலக்கு. தற்போது சிங்கப்பூரில் உள்ள முக்கிய இடங்களில் உள்ள ஹை ரைஸ் ஆபீஸ் டவர்கள், என்பது சதவிகித சிங்கப்பூரில் கட்டப்படும் சொத்துகளில் சீனா முதலீடு செய்துள்ளதாம். முக்கியமாக வங்கிகள் மூலம் நிறைய சீன முதலீடு இருப்பதால் சிங்கப்பூரின் பொருளாதாரத்தை முடக்குவது போல் முடக்கி சீனா சிங்கப்பூருக்கு உதவுவது போல் உள்ளே வந்து சிங்கப்பூர் நாட்டை தன் கைப்பிடியில் கீழ் கொண்டு வந்து சீனா ராணுவ தளம் அமைத்து தென் சீனா கடலிலும் இந்திய பெருங்கடலில் சீனா ஆதிக்கத்தை முழுவதுமாக கொண்டுவரவும், நமது இந்திய ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான் நிக்கோபார் பாதுகாப்புக்கு சவால் விட சீனா சிங்கப்பூரில் தன் மாஸ்டர் பிளான் செயல் படுத்தி கொண்டுள்ளதாம். ரா உளவு அமைப்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் சிங்கப்பூருக்கு எச்சரிக்கை செய்தி கொடுத்துள்ளது. நல்ல வேலை காங்கிரஸ் அரசு இல்லை, காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் இந்திய பெருங்கடலில் இருக்கும் சீனாவுக்கு அந்தமான் நிகோபார் தீவையே தாரை வார்த்து கொடுத்திருக்கும். ஜைஹிந்த்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-நவ-202007:35:47 IST Report Abuse
Lion Drsekar இந்த செயல்பாட்டுக்கு ஒரே கருத்து
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
27-நவ-202004:29:39 IST Report Abuse
blocked user இவன்களின் தலையில் இந்தியாவிடம் அடிவாங்கியபின்தான் திருநதவேண்டும் என்று எழுதியிருந்தால் யாரால் மாற்ற முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X