கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார் பிரதமர்

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: புனேவின் சீரம் இந்தியா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்து வரும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பணிகளை நவ., 28-ல் பிரதமர் பார்வையிடுகிறார்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனகா 'கோவிஷீல்டு' எனும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இத்தடுப்பூசியை தயாரிக்க புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம்
PMModi, Covishield, SerumInstitute, Pune, CovidVaccine, Development

புதுடில்லி: புனேவின் சீரம் இந்தியா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்து வரும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பணிகளை நவ., 28-ல் பிரதமர் பார்வையிடுகிறார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனகா 'கோவிஷீல்டு' எனும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இத்தடுப்பூசியை தயாரிக்க புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகளவில் கோடிக்கணக்கில் தடுப்பூசிகளை உருவாக்கும் முன்னணி நிறுவனமாக சீரம் இந்தியா நிறுவனம் திகழ்கிறது. தற்போது உலகம் முழுவதும் கோவிஷீல்டின் 3-ம் கட்ட தடுப்பூசி சோதனை நடந்து வருகிறது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் இச்சோதனை நடந்தது.


latest tamil news


மூன்றாம் கட்ட சோதனையின் இடைக்கால முடிவுகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது. அவை 70% ஆற்றல் மிக்கவை என அதில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசியை பிரித்தளிக்காமல் ஒரே முறையாக செலுத்தும் போது 90% வரை பயனளிப்பதாக கூறுகின்றன. 131 கொரோனா நோயாளிகளிடம் நடந்த இறுதிகட்ட பரிசோதனையின் தரவுகளை கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. தடுப்பூசி பெற்ற எவருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உண்டாகவில்லை, நோய் தீவிரமடையவில்லை என்றும் தெரிவித்திருந்தது.


latest tamil news



இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் சனியன்று புனேவிலுள்ள சீரம் இந்தியா நிறுவன ஆய்வகத்திற்கு செல்கிறார். இத்தகவலை புனே மாவட்ட அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். தடுப்பூசி தயாரிப்புகள், அவற்றின் பாதுகாப்பு, பக்கவிளைவுகள் போன்றவற்றை கேட்டறிவார். இந்தியாவிற்கு குறைந்த விலையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் தடுப்பூசி வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிப்பார் என்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-நவ-202012:00:03 IST Report Abuse
Tamilan உலகோடு உலகாக, கூட்டத்தோடு கும்மாளம் போடுகிறார்களா அல்லது கூடிவாழ்தல் கோடி நன்மை என்கிறார்களா ?
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
26-நவ-202019:47:49 IST Report Abuse
sankar man of action no doubt
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
26-நவ-202017:30:11 IST Report Abuse
N.K // 131 கொரோனா நோயாளிகளிடம் நடந்த இறுதிகட்ட பரிசோதனையின் தரவுகளை கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. /// ஏற்கனவே கொரோனா வந்தவர்களுக்கு எதற்கு தடுப்பூசி. நன்றாக இருக்கும் பலருக்கு தடுப்பூசி செலுத்தி அவர்களுக்கு கொரோனா தாக்காமல் இருக்கும் என்று உறுதியளிக்கவேண்டாமா ?? என்ன சோதனையோ புரியவில்லை
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-நவ-202022:59:28 IST Report Abuse
தமிழவேல் Guten Tag தடுப்பூசி மருந்துகளின் அடிப்படை என்ன வென்றால், நோய்க்கிருமிகளை சற்று மாற்றி அமைத்து அதையே நமக்கு வெகு சிறிய அளவில் செலுத்தி (அதாவது கிருமியையே செலுத்தி) உடம்பில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை உண்டுபண்ணுவது. ஒரு சிலருக்கு ஒருசில தடுப்பூசிகள் (உதாரணமாய் ஃப்ளு ........) அந்த வியாதியையே உண்டுபண்ணி ஆபத்தில் முடிவதும் உண்டு.. சிலருக்கு வேலை செய்யாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X