அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (28+ 11)
Share
Advertisement
கடலூர்: தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், 'நிவர்' புயல் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.'நிவர் ' புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்ற முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். ரெட்டிசாவடி குமாரமங்கலத்தில் விளைநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட
முதல்வர்பழனிசாமி, முதல்வர்இபிஎஸ், கடலூர், நிவர்புயல்,

கடலூர்: தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், 'நிவர்' புயல் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

'நிவர் ' புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்ற முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். ரெட்டிசாவடி குமாரமங்கலத்தில் விளைநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட பழனிசாமியிடம், விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் சில இடங்களை பார்வையிட்ட பின்னர், துறைமுகத்திற்கு வந்து சேதமடைந்த படகுகளை பார்வையிட்டார். மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.


latest tamil newsபின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 13 லட்சம் மக்கள் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, 2299 முகாம்களில் 2.30 லட்சம் பேர் தங்கியுள்ளனர். கடலூரில் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசித்த 52, 226 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் 77 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றை சரி செய்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 321 மரங்கள் சாய்ந்தன. அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது. 1,617 ஹெக்டேர் நெற்பயிர்கள், 315 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 35 ஏக்கர் வாழை சேதமடைந்துள்ளது. 8 ஹெக்டேரில் மரவள்ளிக்கிழங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளது. இது தற்போது வரை கிடைத்த தகவல். மாவட்ட நிர்வாகம் முழுமையாக கணக்கெடுத்த பின்னரே பாதிப்பு விவரம் தெரியவரும்.

பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுதொகை வழங்கப்படும். காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். நிவர் புயலில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளது.

புயலில் இரவு பகல் பார்க்காமல் அமைச்சர், கலெக்டர், எஸ்பி, எம்எல்ஏ உயர் அதிகாரிகள், வேளாண்மை முதன்மை செயலர் ஒருங்கிணைந்து பின்பற்றிய காரணத்தினால், புயலில் இருந்து மக்கள் காக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்றப்படும்.

நிவர் புயல் எப்படி எதிர்கொள்வது எப்படி பாதுகாப்பது எடுத்த நடவடிக்கை சரியான முறையில் நடவடிக்கை எடுத்தோம். இதனால் உயிர்சேதம், பொருட்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் அனைத்து இடத்திற்கு சென்ற பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து கொண்டனர்.வருவாய் துறை அமைச்சர், சென்னையில் கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் தங்கியிருந்து, மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்ததார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (28+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthiah.G - Tamil Nadu,இந்தியா
27-நவ-202011:33:13 IST Report Abuse
Muthiah.G 1. முதல் திமுக ஆட்சியில்-ஏரிகள்,குளங்கள்,குட்டைகள் ஆறுகளின் இரு பக்கங்களிலும் ஆக்கிரமுப்புக்கள் அமைச்சர்கள் மூலம் ஒவ்வொரு வருட ஜமாமந்தியில் வருவாய் வட்டாச்சியர்கள் பணம் வசூலித்தனர், இதன் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள், அவர்களின் உதவியாளர்கள் பெருமளவில் சம்பாதித்தனர். 2. பல வருடங்களாக ஆக்கிரமுப்பு ஊழல்கள் நடந்து வருகின்றது, அதனால் கால மாற்றத்தால் புயல்கள்,மழைகளின் மூலம் மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். 3. வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அவர்களின் உதவியாளர்கள், அவரவர்களின் பணிகளை அரசு ஆவணங்களில் பதிவு செய்ய வில்லை,லஞ்சம் அதாவது கையூட்டு வாங்குதும்,வசூலிப்பதும் அவர்களின் முதல் வேலையாக கொண்டுள்ளனர்,வட்டாச்சியர்களும் உடந்தையாக உள்ளனர் 4. உடனே மத்திய- மாநில உயர் அதிகாரிகளின் மூலம் நில அளவு செய்து மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ஏரிகள்,குளங்கள்,குட்டைகள் ஆறுகளின் இரு பக்கங்களிலும் உள்ள ஆக்கிரமுப்புக்களை மத்திய படைகள் மூலம் அகற்றவேண்டும். 5. அரசியல்வாதிகள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து பேசவேண்டும், ஆனால் தமிழக அரசியல்வாதிகள் முட்டால் தனமாக பேசுவதை நிறுத்திக்ககொண்டால் மக்களுக்கு நன்மை. 6. நடப்பு அரசை குறைகள், குற்றங்கள் சொல்லி பல கட்சிகள் பேசுவதால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. 7. ஆங்கிலேயர் ஆட்சியில் வரிகள் மட்டும் கொடுக்க மறுத்த மக்கள், தற்பொழுது வரிகள் கட்ட, பல வழிகளில் பல துறைகளுக்கு லஞ்சங்கள் கொடுத்துக்கொண்டுள்ளனர். 8."எது சுதந்திரம் "என நினைக்கும் பொழுது ஆங்கிலேயர் ஆட்சியே நல்லது என தோன்றுகிறது.
Rate this:
Cancel
27-நவ-202009:16:18 IST Report Abuse
ஆப்பு அடப்பாவமே... பாதிப்பு இல்லேங்கறாரே... எப்பிடி லட்சம் கோடி நிவாரண நிதி கேட்பது? சின்ன பாண்டிச்சேரியே 400 கோடி சேதாரம்னு சொல்லியிருக்கே...
Rate this:
Anand - chennai,இந்தியா
27-நவ-202010:36:28 IST Report Abuse
Anandசரி அஞ்சு லட்சம் கோடி பாதிப்பு.... இப்போ திருப்தியா?...
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
27-நவ-202007:20:09 IST Report Abuse
ANTONYRAJ திமுக நிவர் புயலை வச்சு எடப்பாடி அரசாங்கத்தின் மீது சேற்றை வாரி வீசி ஓட்டுக்களை அள்ளிடலாம் என்ற ஸ்டாலின் கண்ட கனவு பலிக்காமல் போய் விட்டது. திமுக ஆட்சி எப்படி இருக்கும்னு மறந்து போயிருந்த சென்னை மக்களுக்கு நேற்று பத்து மணி நேரம் இல்லாம போன மின்சாரம் திமுக ஆட்சியை ஞாபகப்படுத்தியிருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X