புது டில்லி: 2008-ல் இதே நாளில் (26/11) மும்பையில் ஊடுருவிய லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 166 பேரை ஈவு இரக்கமின்றி கொன்றனர். அச்சம்பவத்திற்கு காரணமான ஹபீஸ் சையத் பாக்.,ல் தனது இல்லத்தில் சொகுசாக பொழுதை கழித்து வரும் தகவல் கிடைத்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சையது 2019 ஜூலையில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றான். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவன் பெயர் உள்ளது. ஆனால் பாக்., அரசோ சிறைத் தண்டனை பெற்ற பிறகும் இவனை சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளது.
![]()
|
பயங்கரவாதத்திற்கு துணை போனதற்காக சர்வதேச நிதி நடவடிக்கை குழு பாக்., நாட்டை சாம்பல் பட்டியலில் சேர்த்தது. அடுத்து கருப்புப் பட்டியலுக்கு மாற்றினால் பொருளாதார தடையை எதிர்கொள்ள வேண்டி வரும். அதனை தவிர்க்க நடத்தபட்ட நாடகமே ஹபீஸ் மீதான இந்த நடவடிக்கை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய உளவு அமைப்பு ஹபீஸ் சையது பற்றிய தகவல்களை திரட்டியுள்ளது. அதில் பல அதிர்ச்சி சம்பவங்களை விவரித்துள்ளனர். "ஹபீஸ் சையது கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்ற தோற்றத்தை வெளியுலகிற்கு உருவாக்கியுள்ளனர். அவன் பெரும்பாலும் லாகூரில் உள்ள ஜோகர் டவுன் இல்லத்தில் சொகுசாக வாழ்கிறான்.
அங்கிருந்த படி பயங்கரவாதக் குழுவை நடத்தி வருகிறான். கடந்த மாதம் லக்சர்-இ-தொய்பா ஜிஹாத் பிரிவு தலைவன் ஜாகி-உர்-ரஹ்மான் லக்வியை ஹபீஸ் சந்தித்துள்ளான். ஜிஹாத்துக்கான நிதி சேகரிப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதித்துள்ளனர்." இவ்வாறு கூறியுள்ளது.
![]()
|
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE