புதுடில்லி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியா 4-வதுஇடத்தை வகிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
![]()
|
3-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.தொடர்ந்து அவர் கூறுகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியா 4-வதுஇடத்தை வகிக்கிறது . அதனுடைய திறன் 136 ஜிகா வாட் ஆக உள்ளது. நாட்டின் மொத்த திறனில் 36 சதவீதம் ஆகும்.
கடந்த ஆறு ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இரண்டரை மடங்காக அதிகரித்துள்ளோம். நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கும் நோக்கத்தை தனது அரசாங்கம் இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருகிறது.
![]()
|
கடந்த 2017 ம் ஆண்டில் இருந்து நிலக்கரி பயன்பாட்டில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனிற்கு மாறி வருகிறோம். இது அதிக செலவு கொண்டதாக இருந்தபோதிலும் நாங்கள் அதில் முதலீடு செய்தோம். தற்போது அதன் செலவு குறைக்கிறது. இவ்வாறு பிரதமர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement