ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில்நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டி களத்தில் குதித்துள்ளன.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 28 ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 22 ம் தேதி வரையில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 20 மாவட்டங்ளில் 280 உறுப்பினர்களை தேர்வு செய்யும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் ,230 நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளுக்கான தேர்தல், 12 ஆயிரம் பஞ்சாயத்து இடங்களுக்கான தேர்தல் என நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
தேர்தல் மற்றும் வேட்பாளர்களுக்கான பிரச்சார நடவடிக்கைகளைத் தவிர விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்" என்றும் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு மதிப்பாய்வு செய்யப்படும் என மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
பா.ஜ..சார்பில் மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஜிதேந்திர சிங் மற்றும் அனுராக் தாக்கூர், தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாஹனாவாஸ் உசேன் ,ஸ்மிருதி இரானி, கிருஷன் பால் குஜ்ஜார், ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஜாபர் இஸ்லாம் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். மேலும் டிஜிட்டல் பேரணிகள் மற்றும் வீட்டுக்கு வீடு சென்று பிரசாரம் செய்வது போன்ற நடவடிக்கைகைளில் ஈடுபட உள்ளது.இதற்காக 800 ஐ.டி.,நபர்களை அமர்த்த முடிவு செய்துள்ளது.

குப்கர் கூட்டணியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பாரூக் அப்துல்லா மக்களுக்கு வீடியோ மூலம் மக்களிடம் , தன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பி.டி.பி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி தெற்கு காஷ்மீரில் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார், மேலும் சில கூட்டங்களிலும் உரையாற்றியுள்ளார்.
சோபோரின் முன்னாள் எம்.எல்.ஏ ஹாஜிர் ரஷீத்தின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. "இவ்வளவு அதிக பயங்கரவாத பாதிப்புக்குள்ளான பகுதியில் அவர் எவ்வாறு பிரச்சாரம் செய்ய முடியும், இது எங்களை பிரச்சாரத்தில் இருந்து தடுக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சி" என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
இதனிடையே காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக உருவாகி உள்ள ஜம்மு-காஷ்மீர் அபானி கட்சி (ஜே.கே.ஏ.பி) முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது.
அதன் தலைவர் சையத் அல்தாஃப் புகாரி கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்கள் அரசியல் கட்சிகளின் தவறான முழக்கங்களால் எப்போதும் திசைதிருப்பப்படுகிறார்கள், அவர்கள் தற்போதைய அமைப்பில் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE