நவ., 27, 2008
உத்திரப்பிரதேசம், அலகாபாத் அருகே உள்ள, தையா என்ற ராஜ குடும்பத்தில், 1931- ஜூன், 25ம் தேதி பிறந்தவர், விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற, வி.பி.சிங். பூமிதான இயக்கத்துக்கு, தன் சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார்.காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், வர்த்தகத் துறை இணை அமைச்சர், நிதியமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வகித்தார். உ.பி., முதல்வராகவும் பணியாற்றினார். தன்மானம் கருதி, காங்கிரசில் இருந்து வெளியேறினார்.
ஜனதா தளம் என்ற கூட்டணி கட்சி உதயமானது. வி.பி.சிங், தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989- லோக்சபா தேர்தலில், ஜனதாதளம் வெற்றி பெற்றது. நம் நாட்டின், ஏழாவது பிரதமராக, 1989 டிச., 2ம் தேதி பொறுப்பேற்றார். அரசியல் அழுத்தம் காரணமாக, 1990 நவ., 10ம் தேதி பதவி விலகினார். வெறும், 11 மாதங்கள் மட்டுமே, பிரதமர் பதவியில் இருந்தாலும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் காட்டினார். 2008 நவ., 27ம் தேதி இயற்கை எய்தினார்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE