அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும்

Updated : நவ 28, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (78)
Share
Advertisement
சென்னை :'புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும், உடனடி நிவாரணமாக, 5,௦௦௦ ரூபாய் வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:'நிவர்' புயலால், மழை பாதிப்பிற்கு உள்ளான கொளத்துார், வில்லிவாக்கம் உட்பட, 11 சட்டசபை தொகுதிகளில், உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி, இரு தினங்களாக மக்களை சந்தித்துள்ளேன்.வெள்ள நிவாரண
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ரூ.5,000 வழங்க வேண்டும்: ஸ்டாலின்

சென்னை :'புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும், உடனடி நிவாரணமாக, 5,௦௦௦ ரூபாய் வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

'நிவர்' புயலால், மழை பாதிப்பிற்கு உள்ளான கொளத்துார், வில்லிவாக்கம் உட்பட, 11 சட்டசபை தொகுதிகளில், உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி, இரு தினங்களாக மக்களை சந்தித்துள்ளேன்.வெள்ள நிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ளோரை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தேன். கடந்த, 2015 டிசம்பர் பெருவெள்ளத்தின் போது, சி.ஏ.ஜி., தன் அறிக்கை வாயிலாக, அ.தி.மு.க., அரசின் தோல்வி குறித்து, தனி அறிக்கை கொடுத்து எச்சரித்திருந்தது.

அந்த பெருவெள்ளத்தில் இருந்து, அ.தி.மு.க., அரசு தேவையான பாடம் கற்றுக் கொள்ளவில்லை என, பாதிக்கப்பட்ட மக்கள், ஒரே குரலில் சொன்னதையும் கேட்க முடிந்தது.கணக்கு காட்டுவதற்காக துார் வாராமல், மழைநீர் கால்வாய்களை ஒழுங்காக துார் வாரியிருந்தால், சாலைகளில், தண்ணீர் தேங்குவதை தவிர்த்திருக்க முடியும்.நிவர் புயலால், பல மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கால்நடைகள் சேதம், வீடு இடிந்து விழுந்தது எல்லாம் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளது. மீனவர்களின் படகுகள், விவசாயிகளின் விளைபயிர்கள் போன்றவற்றிற்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்த விவரங்கள், முழுமையாக வெளியாக வில்லை என்றாலும்,- பரவலாக புயல் பாதிப்பு, பல மாவட்டங்களிலும் உள்ளது.

பாதிப்புகளை உடனே ஆய்வு செய்து,- இழப்புக்குள்ளாகி உள்ள அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக, 5,000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும்.வீடு இழந்தவர்களுக்கு புது வீடுகள் கட்டித் தருவதோடு, வேளாண் விளைபொருட்கள் இழப்பீட்டிற்கு உள்ளானவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
27-நவ-202022:13:45 IST Report Abuse
konanki குடும்ப அடிமை தோல்விக்கு 303 பெரிசு 38 சிரிசு ன்னு யாராவது சொல்லி குடுங்கபா.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
27-நவ-202022:11:20 IST Report Abuse
konanki குடும்ப அடிமை தோல்வி க்கு பயத்தில் 303 மறந்து போச்சா?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-நவ-202020:53:05 IST Report Abuse
RajanRajan ஆமாம்பா, கோபாலபுரத்து வுட்டுலே தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எனவே அந்த மூலபத்திரத்துக்கு ஒரு 5000/ ரூபாய் உடனடி பேரிடர் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். வாழ்க அண்ணா நாமம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X