மும்பை தாக்குதல்: பாக்.,கிற்கு இந்தியா கண்டிப்பு

Added : நவ 26, 2020
Share
Advertisement
நியூயார்க்:''மும்பை தாக்குதலுக்கு காரணமாக உள்ளவர்களை, நீதிக்கு முன், பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக, உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்,'' என, அமெரிக்காவுக்கான இந்திய துணை துாதர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தினார்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008, நவ., 26ல், பாகிஸ்தானைச் சேர்ந்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதலில்

நியூயார்க்:''மும்பை தாக்குதலுக்கு காரணமாக உள்ளவர்களை, நீதிக்கு முன், பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக, உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்,'' என, அமெரிக்காவுக்கான இந்திய துணை துாதர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தினார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008, நவ., 26ல், பாகிஸ்தானைச் சேர்ந்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.


நடவடிக்கை

இதில், ஒன்பது பயங்கரவாதிகள், ஆறு யூத இன மக்கள் உட்பட, 166 பேர் உயிரிழந்தனர்; மேலும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த தாக்குதலின், 12ம் ஆண்டு நினைவையொட்டி, அமெரிக்க - இந்திய பொது விவகார கமிட்டி, அமெரிக்க யூதர்கள் கமிட்டி உள்ளிட்டவை சார்பில், நினைவஞ்சலி கூட்டம், நியூயார்க்கில் நேற்று நடத்தப்பட்டது.இதில் பங்கேற்ற, அமெரிக்காவுக்கான இந்திய துணை துாதர் ரன்தீர் ஜெய்ஸ்வால் பேசியதாவது:

இந்த கோர தாக்குதலில் நீதி கிடைப்பதை, உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும். தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த, பாக்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.உலக வரலாற்றில் நமக்கு தெரிந்து நடந்துள்ள மிகவும் மோசமான சம்பவம் இது; உலக நாடுகளுக்கு உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலாக, பயங்கர வாதம் உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக, உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சீர்குலைப்புஅதுபோல, பெரும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்துக்கு எதிராகவும், உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

அமெரிக்காவுக்கான, இஸ்ரேல் நாட்டின் துணை துாதர் இஸ்ரேல் நிட்சான் பேசியதாவது: மும்பையில் நடந்த பயங்கர தாக்குதல், இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது; இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை, ஜனநாயகக் கொள்கையை கடைப்பிடிப்பவை. நம்மிடையே மிகுந்த நெருக்கம் உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல், நம்மிடையேயான நட்புறவை மேலும் நெருக்கமானதாக்கியுள்ளது.

பொருளாதாரத்தை சீர்குலைப்பது, சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்துவது, கலாசாரத்தை சீர்குலைப்பது ஆகியவையே, பயங்கரவாதிகளின் நோக்கம். முன்னேற்றம்இந்த கொடூர தாக்குதல் நடத்திய பிறகும், பயங்கரவாதிகளின் நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில், இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.


அமெரிக்கா துணை நிற்கும்

அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் கேல் பிரவுன் கூறியதாவது: மும்பை தாக்குதலில், ஆறு அமெரிக்கர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள், சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக இந்தியாவுக்கு துணை நிற்போம்.தாக்குதலுக்கு காரணமானோர் குறித்து தகவல் அளிக்க, பரிசு திட்டத்தையும் ஏற்கனவே அறிவித்து உள்ளோம்.பயங்கரவாதத்தை ஒழிக்க, இந்தியாஉடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


இஸ்ரேலில் அஞ்சலி

மும்பை தாக்குதலில் உயிரிழந்த யூதர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு, மேற்காசிய நாடான இஸ்ரேலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெருசலேம், டெல் அவிவ், ரெஹோவத் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேலிய மற்றும் இந்தியர்கள் இணைந்து, பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X