பொது செய்தி

இந்தியா

சர்வதேச விமான சேவை தடை மேலும் நீட்டிப்பு

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை : சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, அடுத்த மாத இறுதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச்சில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அனைத்து விமான சேவைகளும், மார்ச், 23 லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன. பின், வைரஸ் பாதிப்புகள் குறைந்ததை தொடர்ந்து, மே மாதம், உள்நாட்டு பயணியர் விமான சேவைகள் மட்டும்
 சர்வதேச விமான சேவை  தடை மேலும் நீட்டிப்பு

மும்பை : சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, அடுத்த மாத இறுதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச்சில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அனைத்து விமான சேவைகளும், மார்ச், 23 லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன. பின், வைரஸ் பாதிப்புகள் குறைந்ததை தொடர்ந்து, மே மாதம், உள்நாட்டு பயணியர் விமான சேவைகள் மட்டும் துவங்கப்பட்டன.


latest tamil news



வெளிநாடுகளில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த தடை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து பொது இயக்குனரகம், வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, வரும் டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.எனினும், இந்த தடை, சர்வதேச சரக்கு விமானங்களுக்கும், ஒப்புதலுடன் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் இயங்கும் விமானங்களுக்கும் பொருந்தாது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவைகள் தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
27-நவ-202012:53:27 IST Report Abuse
sahayadhas வெட்கம் கெட்ட தடை .
Rate this:
Cancel
mothibapu - Prayagraj,இந்தியா
27-நவ-202010:02:20 IST Report Abuse
mothibapu இந்தியாவில் உள்ளவர்கள் ஒழுங்காக அரசு கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றினாலே போதும். தேவைல்லாத தடைகள் அகற்ற வேண்டும்.
Rate this:
Cancel
27-நவ-202008:06:56 IST Report Abuse
ஆப்பு நேத்திக்கி கூட அமெரிக்காவிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மூலமாக லண்டன் வழியாக எங்க குடியிருப்பைச் சேர்ந்தவங்க வந்து இறங்கியிருக்காங்க. இவிய்ங்க எந்த சர்வதேச விமான போக்குவரத்தை தடை செஞ்சிருக்காங்க? சரியாச் சொல்லுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X