வீட்டில் அமர்ந்தபடி ஹபீஸ் சயீத் சதி: பாக்.,கின் இரட்டை வேடம் அம்பலம்

Updated : நவ 28, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி:பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, லஷ்கர் - இ -- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், சிறையில் அடைக்கப் படாமல், தன் வீட்டில் அமர்ந்தபடி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008 நவம்பர், 26ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 170 பேர் கொல்லப்பட்டனர்.
ஹபீஸ் சயீத், சதி, பாக்.,  இரட்டை வேடம், அம்பலம்

புதுடில்லி:பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, லஷ்கர் - இ -- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், சிறையில் அடைக்கப் படாமல், தன் வீட்டில் அமர்ந்தபடி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008 நவம்பர், 26ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 170 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


கறுப்புப் பட்டியல்



உலகையே உலுக்கிய இந்த நாசவேலை, பாகிஸ்தானைச் சேர்ந்த, லஷ்கர் -- இ -- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஹபீஸ் சயீதை, தேடப்படும் பயங்கரவாதியாக, ஐ.நா., அறிவித்தது. இந் நிலையில், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, 2018ல், பாகிஸ்தானை, 'கிரே' பட்டியலில் சேர்த்தது.

'பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவது மற்றும் பண மோசடிகளை, 2019 அக்டோபருக்குள், முற்றிலும் நிறுத்த வேண்டும்; இல்லாவிடில், ஈரான் மற்றும் வட கொரியாவுடன் சேர்த்து, பாகிஸ்தானும் கறுப்புப் பட்டியலில் இடம் பெறும்' என, எப்.ஏ.டி.எப்., எச்சரித்தது.இதற்கு பயந்த, பாக்., பிரதமர் இம்ரான் கான், லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதை, 2019 ஜூலையில் கைது செய்தார்.

பின், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கிய வழக்கில், ஹபீஸ் சயீதுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பாக்.,கின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பிப்ரவரியில் உத்தரவிட்டது.மேலும் இரண்டு வழக்குகளில், அவருக்கு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஹபீஸ் சயீத், லாகூரில் உள்ள, கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.வீட்டு காவல்ஆனால், அவர் சிறையில் இல்லை என்றும், லாகூரின், ஜோஹர் டவுன் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாகவும், மத்திய உளவுத்துறை தகவல் சேகரித்துஉள்ளது.

இது குறித்து, டில்லியில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஹபீஸ் சயீத், பெரும்பாலான நேரங்களில், அவரது வீட்டில் இருக்கிறார். அங்கு, வெளிப்படையான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.அவரை, விருந்தினர்கள் சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். மும்பை தாக்குதல் திட்டத்தில் மூளையாக செயல்பட்டவரும், லஷ்கர் போர் பிரிவின் தலைவருமான, ஸாக்கி -- உர் -- ரஹ்மான் லக்வி, சமீபத்தில் ஹபீஸ் சயீதை வீட்டில் சந்தித்து பேசிஉள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவது தொடர்பாக, அந்த கூட்டம் நடந்ததாக தெரியவந்துள்ளது.ஹபீஸ் சயீதை வீட்டு காவலில் வைக்க, நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளதா என்பது குறித்து தகவல் தெரியவில்லை. ஆனால், அவர் சிறையில் இருந்து வீட்டுக்கு வந்து செல்ல, அதிகாரபூர்வமற்ற முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
29-நவ-202013:16:13 IST Report Abuse
Subramaniyam Veeranathan பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ராணுவமும் தொடர்ந்து செய்யும் அட்டுழியங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே. முழுக்க நனைந்தபிறகு முக்காடு எதற்கு?
Rate this:
Cancel
27-நவ-202016:27:44 IST Report Abuse
ஆரூர் ரங் கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 🤓திமுக 🤓உதவி விடுதலை செய்தபோது நாம் எதிர்த்துப் போராடினோமா ? ஊருக்கு உபதேசம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
27-நவ-202016:02:38 IST Report Abuse
Endrum Indian முஸ்லிம் பாகிஸ்தான் இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்தால் இது தான் உண்மைதன்மை. ஒரே வார்த்தை முஸ்லிமை நம்பாதே எந்த காரணத்திற்க்காகவும் அவ்வளவே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X