மும்பை: ‛வெட்கம் கெட்ட மும்பை பயங்கரவாத தாக்குதல் என்றைக்கும் மறக்கப்படாது' என தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு, நவ.,26ம் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி, சி.எஸ்.எம்.டி. ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட சில இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினர். தாஜ் ஹோட்டலில் 31 பேர் உள்பட, மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர், 320க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பை தாஜ் ஹோட்டல் படத்தை பகிர்ந்து, வெட்கம் கெட்ட தாக்குதல் என்றைக்கும் மறக்கப்படாது எனப்பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களை எண்ணி நாம் துக்கப்பட்டாலும், எதிரிகளை வெல்ல, துணிச்சலாக உயிர் தியாகம் செய்தவர்களை மதிக்க வேண்டும் எனவும், ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை பாராட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE