பொது செய்தி

இந்தியா

'எல்லையில் பிரச்னையை தீர்க்க இந்தியா - சீனா நேர்மையான பேச்சு'

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
பீஜிங்:'லடாக்கில், படைகளை விலக்கி கொள்வது குறித்து, சீனாவும் இந்தியாவும், நேர்மையான முறையில் பேச்சு நடத்தி வருகின்றன' என, சீன ராணுவம் தெரிவித்து உள்ளது.இந்தியா -- சீனா இடையே, கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியில், மே மாதம் முதல், மோதல் போக்கு நிலவி வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வந்து, எல்லையில் பழைய நிலை திரும்ப, இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான, எட்டாவது
India, China, LAC, இந்தியா, சீனா, எல்லை பிரச்னை

பீஜிங்:'லடாக்கில், படைகளை விலக்கி கொள்வது குறித்து, சீனாவும் இந்தியாவும், நேர்மையான முறையில் பேச்சு நடத்தி வருகின்றன' என, சீன ராணுவம் தெரிவித்து உள்ளது.

இந்தியா -- சீனா இடையே, கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியில், மே மாதம் முதல், மோதல் போக்கு நிலவி வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வந்து, எல்லையில் பழைய நிலை திரும்ப, இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான, எட்டாவது சுற்று பேச்சு, சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில், எல்லையின் தற்போதைய நிலை குறித்து, சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் ரென் குவோக்வியாங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:


latest tamil news


இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான, எட்டாவது சுற்று பேச்சுக்கு பின், இந்தியா -- சீனா எல்லையில், நிலைமை சீராக உள்ளது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து, இந்தியா -- சீனா எல்லையின் மேற்கு பகுதியில் உள்ள, உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில், படைகளை விலக்கிக் கொள்வதை ஊக்குவிப்பதற்காக, இரு நாடுகளும், நேர்மையான மற்றும் ஆழமான பேச்சு மற்றும் ஒருங்கிணைப்பை பராமரித்து வருகின்றன.

இரு நாட்டு தலைவர்களும் எட்டிய, முக்கியமான ஒருமித்த கருத்தை செயல்படுத்த, இரு தரப்பினரும் சம்மதித்து உள்ளனர். இந்தியாவுடன், ராணுவ மற்றும் துாதரக மட்டத்தில் பேச்சை தொடர, சீனா தயாராக உள்ளது. அதே நோக்கத்தை இலக்காக வைத்து, இந்தியாவும் செயல்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


எஸ்.சி.ஓ., கூட்டம் சீன பிரதமர் பங்கேற்பு


எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் தலைவர்களின், 19வது கூட்டத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, வரும், 30ல் இந்தியா நடத்துகிறது. இதில், சீன பிரதமர் லீ கேகியாங் பங்கேற்க உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான் நேற்று அறிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
27-நவ-202012:11:00 IST Report Abuse
Anand திருட்டு திராவிஷத்தை போல...உண்மைக்கும் சீனனுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இவனுங்க தான் உண்மையின் மொத்த உருவம் என கூவிக்கொண்டிருப்பார்கள்...
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
27-நவ-202010:57:55 IST Report Abuse
Palanisamy T 1962-ல் நடந்த எல்லைப் போரில் பல்லாயிரக் கணக்கான சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி பனிப்பொழிவில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிய நிலையில் அன்று நேரு அவர்கள் அந்த ராணுவ வீரர்கள் திரும்பிப் போக முடியாத நிலையில் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ராணுவத் தாக்குதலையும் நிறுத்தி அவர்கள் திரும்பிச் செல்ல வழி விட்டதாகவும் சமீபத்தில் அறிந்த செய்தி. இல்லையென்றால் அத்தனைப் பேரும் அந்த மிகக் கடுமையான பணிப் பொலிவில் சிக்கி மடிந்திருக் கூடும் அன்று இயற்க்கை இந்தியாவிற்கு சாதகமாக செயல்பட்ட நிலையில் போர் ஒரு முடிவிற்கு வந்தது. இது எந்த அளவிற்கு உண்மையென்றுத் தெரியவில்லை. அன்று புதிதாக சுதந்திரம் பெற்று உதயமான இந்திய நாடு இராணுவமே வலிமையான நிலையில் இல்லாமல் இருந்தது. அன்று போர் நடந்திருந்தாலும் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கலாம். அன்றிலிருந்து மிக நீண்டக் காலமாகவே காங்கிரஸ் தலைமையில்தான் மத்திய ஆட்சி நடந்தது. அவர்கள் ராணுவத்தை சரியான இலக்கோடு பலப்படுத்தியதாகத் தெரியவில்லை. இன்னும் நவீனப் படுத்தும் எண்ணமும் அவர்களிடம் இருந்ததாக தெரியவில்லை ராணுவத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கினால் அவர்கள் சீன அரசை மறைமுகமாகப் பகைத்துக் கொள்வதற்குச் சமம். சீனாவை என்றுமே நம்பக கூடாது. அருணாச்சலத்தையே அவன் உரிமைக் கொண்டாடுகின்றான். இலங்கையோடு அவன் நெருங்கி உறவாவாடியதும், பதிலுக்கு இலங்கையும் அவனிடம் நெருங்கி உறவாடியதும் நாம் அறிந்ததே எல்லாம் அவனுடைய பச்சை சுயநலப் போக்குதான். அமெரிக்கா அரசையே மிரட்டுகின்ற அவனுக்கு மற்ற நாடுகள் எம் மாத்திரம் ராணுவத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்தியா உறுதியாகப் பயணிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Badri narayanan poondi - puttaparthi,இந்தியா
27-நவ-202006:48:09 IST Report Abuse
Badri narayanan poondi சீன் படைகளால் இமாலய குளிரை தாக்குப்பிடிக்க முடியவில்லை என ஏற்கனவே செய்திகள் வந்துள்ள நிலையிலும் ஷாங்காய் கூட்டம் நடக்களல்லவா நிலையிலும் சீன தன வழக்கமான எல்லை தாக்குதலகளையும் அறிக்கைகளையும் நிறுத்தி சுமுகமாக தான் அமைதிக்கு ஓத்துழைப்பதாக கூறுவது புரிந்துகொள்ள கூடியதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X