யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர்

Added : நவ 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
துபாய் : ''கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதும் ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்'' என வெளியுறவு துறைஅமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபிக்குச் சென்றார். இளவரசர் ஷேக் முகமது பின் சையதுஅல் நஹ்யானை
UAE, Jaishankar, External Affairs Minister

துபாய் : ''கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதும் ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்'' என வெளியுறவு துறைஅமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபிக்குச் சென்றார். இளவரசர் ஷேக் முகமது பின் சையதுஅல் நஹ்யானை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.


latest tamil news



இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாழ் இந்திய சமூகத்தினரிடம் அவர் 'வீடியோகான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார். இது குறித்து அவர் 'டுவிட்டரில்' வெளியிட்டு உள்ள செய்தி:

அபுதாபியில் இந்திய சமூகத்தினருடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் அபுதாபியில் உள்ள இந்திய துாதரகத்துடன் இணைந்து கொரோனா சவாலை சமாளித்து வருவது பாராட்டத்தக்கது. கொரோனா பிரச்னை மறைந்து இயல்பு நிலை திரும்பியதும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாழ் இந்தியர்களின் குறைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
27-நவ-202012:56:04 IST Report Abuse
sahayadhas flight Service துவங்க அனுமதி கிடைக்குமானு கேளுங்க
Rate this:
Cancel
27-நவ-202011:47:13 IST Report Abuse
ஆப்பு அவிங்களுக்கு 15 லட்சம் திர்ஹாமோ, தினாரோ போடுங்க. எங்களுக்கு கிடைச்சமாதிரி பாவம் அவிங்களுக்கும் கிடைக்கட்டும்.
Rate this:
Cancel
natesa -  ( Posted via: Dinamalar Android App )
27-நவ-202010:16:25 IST Report Abuse
natesa roles and regulations are common for everyone in gulf. so I like gulf.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X